Paper correction system to be changed to digital: CBSE announcement on Screen Marking Valuation for 12 Class Source : Google
இந்தியா

CBSE : பேப்பர் திருத்தம் டிஜிட்டலுக்கு மாற்றம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

CBSE On-Screen Marking for Class 12 : இனி ரெட் பென் பயன்படுத்தி விடைத்தாள்களை திருத்தும் முறைக்கு மாற்றாக இனி டிஜிட்டல் முறையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது .

Rohini

ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் முறை

CBSE On-Screen Marking for Class 12 : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவிப்பின் படி இந்த ஆண்டு நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்துவதற்கு ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (On-Screen Marking – OSM) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் திருத்தம் எப்படி நடைபெறும்

தேர்வர்கள் தேர்வு எழுதி முடித்த பின்பு விடைத்தாள்கள் அனைத்தும் அதிநவீன மெஷின்கள் மூலம் ஸ்கேன் (Scan) செய்யப்படும்.

இந்த ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் அனைத்தும் சிபிஎஸ்இ-யின் பாதுகாப்பான சர்வரில் (Server) ஏற்றப்படும்.இங்கு ஆசிரியர்கள் நேரடியாக திருத்தங்களை மேற்கொள்ள மாட்டார்கள் மாற்றாக டிஜிட்டல் முறையில் திருத்தும் மேற்கொள்ளப்படும்.

மொத்த மதிப்பெண்களை கூட்டி மதிப்பெண் வழங்குவதற்கும் டிஜிட்டல் முறையே பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது

இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் என்ன

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இந்த முடிவை எடுத்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது .

மதிப்பெண்களை வழங்கும் போது அதில் ஏற்படும் விடை திருத்த சிக்கலை தவிர்ப்பதற்கும் ,விடைத்தாள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் நேர மிச்சத்தை தவிர்ப்பதற்கும், மாணவர்களின் மறுமதிப்பீடு சமயத்தில் இன்னும் எளிமையாக கையாளுவதற்கு இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் கவனத்திற்கு

இந்த டிஜிட்டல் முறை மாற்றத்தால் விடைத்திருத்தமானதும் டிஜிட்டல் முறையிலே மேற்கொள்ளப்படும் என்பதால் ,விடையளிக்கும் போது தெளிவாகவும் ,திருத்தமாவும் எழுத வேண்டும்.

முக்கியமாக வரைபடம் வரைவது போன்ற கேள்விகளுக்கு படங்களை தெளிவாக வரையவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.