Prime Minister Narendra Modi Speech About Operation Sindoor ANI
இந்தியா

”ஆபரேஷன் சிந்தூர்” 100 சதவீதம் வெற்றி : பிரதமர் மோடி பெருமிதம்

PM Modi About Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவுக்கு 100 சதவீதம் வெற்றி கிடைத்ததாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.

Kannan

நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் :

PM Modi About Operation Sindoor : பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முக்கிய மசோதாக்களை கொண்டு வர மத்திய பாஜக அரசு திட்டமிட்டு இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகளும் தயாராக உள்ளன.

இந்தியாவின் ராணுவ பலம், வியந்த உலகம் :

இந்தநிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்(PM Modi Press Meet). ” ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ஆபரேஷன் சிந்தூர்(Operation Sindoor) நடவடிக்கை மூலம் இந்தியாவின் ராணுவ பலத்தை உலகம் அறிந்து கொண்டது. இந்தியாவின் வலிமையை கண்டு உலகமே வியந்தது.

மேலும் படிக்க : மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம் : முக்கிய மசோதாக்கள் தாக்கல்

ஆபரேஷன் சிந்தூர், 100% வெற்றி :

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை 100 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது. பாதுகாப்பு படையினருக்கு அளித்த குறிக்கோள்கள் துல்லியமாக நிறைவேற்றப்பட்டன. பயங்கரவாதிகள் முகாம்கள் 22 நிமிடத்தில் அழிக்கப்பட்டன. எதிரி நாட்டிற்குள் ஆழமாக ஊடுருவி இந்த தாக்குதலை நாம் நடத்தினோம். எனவே, இந்த வெற்றியை மழைக்கால கூட்டத் தொடரில் நாம் கொண்டாடி மகிழ்வோம்.

விண்வெளி மையத்தில் இந்தியக் கொடி :

மழைக்காலம் என்பது புதிய தொடக்கங்களுக்கான காலம். கடந்த 10 ஆண்டு சராசரி விட இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாகவே உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் கொடி பறக்கிறது. இந்தியாவின் வெற்றி மற்றும் கவுரவத்தை கொண்டாட இதுவே சரியான தருணம். எனவே, இந்த சாதனையையும் மழைக்கால கூட்டத் தொடரில்(Parliament Monsoon Session 2025) கொண்டாடி மகிழ்வோம்” இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

====