Permission to distribute kerosene through ration shops and petrol bunks : Central government  google
இந்தியா

ரேஷன் கடைகள், பெட்ரோல் பங்குகள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகம் : மத்திய அரசு அனுமதி!

Kerosene Oil Petrol Pump : சமையல் எரிவாயு எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளிக்க பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 21 மாநிலங்களில் வீட்டுப் பயன்பாட்டிற்காக மண்ணெண்ணெய்யை மத்திய அரசு தற்காலிகமாக ஒதுக்கியுள்ளது.

Rohini

மண்ணெண்ணெய் விநியோகம் - மத்திய அரசு அனுமதி

Kerosene Oil Sales in Petrol Pump : சமையல் எரிவாயு எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளிக்க பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 21 மாநிலங்களில் வீட்டுப் பயன்பாட்டிற்காக மண்ணெண்ணெய்யை வழங்க மத்திய அரசு தற்காலிகமாக ஒதுக்கியுள்ளது.

பொது விநியோக திட்டம் மூலம் மண்ணெண்ணெய் வழங்க அனுமதி

அமலில் இருக்கும் மத்திய அரசு பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் உரிம விதிமுறைகளில் மாற்றங்களை செய்துளளது . இதன் மூலம், மண்ணெண்ணெய் பயன்பாடு இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்களில் பொது விநியோகத் திட்டம் மூலமாக மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் மண்ணெண்ணெய் வழங்க அனுமதி

அரசின் நியமிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகிக்கத்திற்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

இதன்படி ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையமும் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெயை இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்றும் ,இதற்காக, மாநில அரசுகள் மூலம் ஒரு மாவட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு பெட்ரோல் பங்குகள் நியமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த முடிவு

நெடிது வரும் ஈரான் இஸ்ரேல் போரால் உலகளவில் எரிபொருட்களுக்கான தட்டுப்படைந்து பெருமளவில் ஏற்பட்டிருக்கும் நிலையில் , வீடுகளுக்கு அத்தியாவசிய எரிபொருள் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மறு அறிவிப்பு வரை இது செல்லுபடியாகும்

இந்த விநியோக பயன்படானது 60 நாட்களுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு அதிகாரிகள் தெர்வித்துள்ளனர்