Perplexity AI's new update lets you talk directly to your computer without typing  google
இந்தியா

கம்ப்யூட்டருடன் டைப் செய்யாமல் இனி நேரடியாக உரையாடலாம் : "Perplexity AI" புதிய அப்டேட்

கம்ப்யூட்டருடன் இனி டைப் செய்யாமல் நேரடியாக உரையாடி தகவல்களை பெற்றுக்கொள்ளும் புதிய வசதியை பெர்ப்ளெக்சிட்டி Ai தொடங்கியுள்ளது.

Rohini

புதிய வாய்ஸ் மோட் வசதி

எந்தவொரு தகவலையும் நாம் தேட வேண்டும் என்றால், கீபோர்டில் டைப் செய்து தேட வேண்டிய சூழலால் இருந்தது . ஆனால், இந்த புதிய வாய்ஸ் மோட் வசதி மூலம், பயனர்கள் தங்கள் குரல் மூலமாகவே AI உதவியாளரிடம் தகல்வல்களை கேட்கலாம்.

இது பயனர்களின் தேடல் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதோடு, கம்ப்யூட்டரில் வேலை செய்வதை மேலும் எளிதாக்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

உடனடியாக கிடைக்கும் பதில்கள்

இந்த வாய்ஸ் மோட் வசதியை நீங்கள் பெர்ப்ளெக்சிட்டி கம்ப்யூட்டரில் எனேபிள் (Enable) செய்துவிட்டு நீங்கள் தேடும் தகவல்களை கேட்டாலே போதும் ,உங்களுக்கான விடை உடனடியாக வந்துவிடும் .

நம் ஒவ்வொரு கேள்விக்கும் AI அதை துல்லியமாக கவனித்து நிகழ்நேரத்தில் (Real-time) தெளிவாகவும் உடனடியாகவும் பதில்களை வழங்கும் அளவுக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரத்தை மிச்சப்படுத்தும் வாய்ஸ் மோட்

இந்த வாய்ஸ் மோட் பயன்பாட்டின் மூலம் நம் வேறு வேலைகளை பார்த்துக்கொண்டு தகவல்களை கேட்டாலே போதும் நமக்கான விடை துல்லியமாகவும் உடனடியாகவும் வழங்கி நேரத்தை மிச்சப்படுத்தும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்டுகிறது

தொடர்ச்சியான உரையாடல்களுக்கான நிச்சியத்தன்மையையை இந்த செயல் முறை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது இதன் மூலம் இது பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிது.