person from Mumbai ordering food via Zomato to feed a hungry protester at the Delhi protest has gone viral AI generated
இந்தியா

”மும்பை - டெல்லி, 1500 கி.மீ. கடந்து வந்த உணவு’ : CJP-யினர் பசியாற்ற நேசக்கரம் : இணையத்தில் வைரல்..!

டெல்லி போராட்டத்தில் பசியுடன் இருப்பவருக்கு உணவளிக்கும்படி மும்பையில் இருந்து ஒருவர் Zomato மூலம் உணவு ஆர்டர் செய்தது, வைரலாகி இருக்கிறது.

Kannan

தீவிரமடைந்த டெல்லி போராட்டம்

Delhi Protest, Zomato Delivery Viral Video : நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவே உற்றுநோக்கும் போராட்டம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இணையம் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட இயக்கம், இன்று இந்தியாவே பார்த்திராத பெரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இவர்களுக்கு ஆதரவாக பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார்.

மும்பை டூ டெல்லி - Zomato ஆர்டர்

அரசியல் கட்சிகளின் ஆதரவு, நாளுக்குநாள் குவியும் இளைஞர்கள், பெண்கள் என போராட்டக்களம் பரபரப்புடன் இருக்க, மும்பையில் இருந்து ஒருவர் Zomato மூலம் டெல்லியில் போராடும் போராட்டக்காரர்களுக்கு உணவு ஆர்டர் செய்தது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

1,500 கி.மீ. தூரத்தில் இருந்து ஆர்டர்

மும்பையில் இருந்து அதாவது 1,500 கிமீ தூரத்தில் இருந்து டெல்லியில் பசியோடு வாடும் மாணவர்கள், இளைஞர்கள், போராட்டக்காரர்களுக்காக அவர் உணவு ஆர்டர் செய்தார்.

தனது ஆர்டர் குறிப்பில், "ஜந்தர் மந்தரில் பசியோடு இருக்கும் யாருக்காவது இந்த உணவை தயவுசெய்து கொடுத்துவிடவும்" என எழுதியிருக்கிறார்.

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நபர்

இவரின் இந்த குறிப்பும் பலரையும் நெகிழச் செய்துள்ளது. மும்பையில் இருந்து அனுஜ் ராவத் என பெயரில் போராட்டக்காரர்களுக்கு உணவு ஆர்டன் செய்யப்பட்டு இருக்கிறது.

வைரலான வீடியோ

இதுகுறித்த ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதாவது, Zomato டெலிவரி ஏஜெண்ட் பார்சல் உடன் வருவது அந்த வீடியோவில் தெரிகிறது.

ஆர்டர் குறிப்பில் எழுதியிருப்பதை சத்தமாக வாசிக்கிறார். அதாவது, பசியுடன் இருக்கும் யாராவது இதை வாங்கிக்கொள்ளலாம் என அவர் அழைப்பு விடுக்கிறார்.

வீடியோ வைரலானது தொடர்ந்து அனுஜ் ராவத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

===================