https://www.facebook.com/Hariharasuthan.Thangavel
இந்தியா

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி: தகர்ந்த லண்டன் கனவு

அகமதாபாத் விமான விபத்து குறித்து வரும் சமூக வலைதள பதிவுகள் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளன.

MTM

சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரசுதன் தங்கவேலுவின் பேஸ்புக் பதிவு இது :

பிரதீக் ஜோஷி கடந்த ஆறு ஆண்டுகளாக லண்டனில் சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்தார், தனித்த வாழ்வு. வீடியோ கால்களில் தான் குழந்தைகளிடம் பேச முடியும். தனது மனைவி மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த தனது மூன்று குழந்தைகளுக்காக லண்டனில் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வந்தார்.

ஆறு ஆண்டுகளாக கவனமான திட்டமிடலும், ஆவணப்பணிகளும், பொறுமையும் தொடர்ந்து, குடும்பத்துடன் சேர்ந்து வாழும் கனவு நிறைவேறப்போகிறது என்ற நிலையை அடைந்தது. இரண்டு நாட்கள் முன்பே அவரது மனைவி, டாக்டர் கோமி வ்யாஸ், இந்தியாவிலிருந்த தனது வேலையை ராஜினாமா செய்திருந்தார்.

விசா, பள்ளி, வீடு என புதிய வாழ்விற்கு அனைத்தும் தயார். பிரியாவிடைகள் சொல்லப்பட்டுவிட்டது, இன்று காலை அவர்கள் ஐவரும் பெரும் உற்சாகத்தோடும், கனவுகளோடும் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 171-ல் ஏறினர்.

ஆனால் அவர்களது கனவு நிறைவேறவில்லை. இது அவர்கள் எடுத்த கடைசி செல்பி. இந்த வாழ்க்கையை புரிந்து கொள்ளவே முடியவில்லை. சிரமத்தில் கஷ்டப்பட்டு காலங்களில் எதுவும் நிகழ்வதில்லை. எல்லாம் முடிந்து எதிர்பார்த்த வாழ்வு கையில் கிடைக்கும் போது அனைத்தும் பறி போகிறது. எத்தனை ஆசைகள், கனவுகள், வாழ்வு குறித்த எதிர்பார்ப்புகள்.. அத்தனையும் மண்ணாகிப் போனது. துயரை எழுதவோ சொல்லவோ வார்த்தைகளே இல்லை