Prime Minister Narendra Modi has called for everyone to come together to create a developed India through GST tax reduction. 
இந்தியா

GST 2.0 : வளர்ந்த இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி அழைப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Kannan

ஜிஎஸ்டி வரிகுறைப்பு அமல்

GST Reforms Will Boost Growth, New Middle-Class Rising In India :ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்து நான்கு அடுக்குமுறை 2 அடுக்குகளாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 375 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம் சாமான்ய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் உயரும், பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்கள் அடையும் நன்மைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்களை பார்ப்போம்.

* அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்.

* அவர்கள் விரும்பியதை வாங்கலாம். ஜிஎஸ்டி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும்.

* ஏழைகள், நடுத்தர குடும்பத்தினர், மகளிர், விவசாயிகள், இளைஞர்கள் அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை குறைக்கப்பட்ட விலையில் வாங்கலாம்.

* இதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறும்.

* சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை தகர்க்கவே ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டிக்கு முன்பு வரி விதிப்பு விகிதம் சிக்கலானதாகவே இருந்தது.

* ஜிஎஸ்டி அமலாக்கம் இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

* ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டதன் மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற கோடிக்கணக்கானோரின் கனவு நனவாகி இருக்கிறது.

* நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்து, புதிய சகாப்தம் தொடங்கும்.

* இனி ஜிஎஸ்டியில் 5%, 18% என இரண்டு வரம்பு மட்டுமே இருக்கும். இதனால், உணவு, மருந்து, வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் குறையும்.

* கார், இருசக்கர வாகனங்கள வாங்குவது எளிதாக்கப்படும். நடுத்தர மக்கள் தங்கள் இலக்குகளை எளிதாக அடைய இது வழிவகுக்கும். அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

* வருமான வரியிலும் சலுகை, ஜிஎஸ்டியிலும் சலுகை அளித்துள்ளோம். 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

* ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், ஏழைகள், புதிய நடுத்தர வர்க்கத்தினராக தரம் உயர முடியும். சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் பெருமளவில் பயனடைய முடியும்.

* சிறிய கடைக்காரர் கூட பலனடையலாம். வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி குறைப்பால் மக்கள் 2.5 லட்சம் கோடி வரை மக்கள் செலவு குறைந்துள்ளது.

* பொருட்களை முடிந்தவரை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். அவை உலகத் தரம் மிக்கதாக இருக்க வேண்டும்.

* இந்திய தயாரிப்புகளையே இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் நிலை வர வேண்டும். அப்போதுதான் சுய சார்பு இந்தியா இலக்கை எட்ட முடியும்.

==============================