PM Modi-Canadian Prime Minister Mark Carney talks about US Israel Attack on Iran War Ceasefire source: google
இந்தியா

மேற்காசிய நிலவரம் கவலை அளிக்கிறது : போரை நிறுத்தி விட்டு அமைதி காணுங்கள்! : பிரதமர் மோடி அழைப்பு!

PM Modi-Canadian Prime Minister Mark Carney talks : ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போரை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும், என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

S Kavitha

PM Modi-Canadian Prime Minister Mark Carney talks :

கனடா பிரதமர் இந்தியா வருகை

PM Modi Calls Israel Iran Ceasefire : இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இருதரப்பு நாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வந்துள்ளார்.

டெல்லியில் பேச்சுவார்த்தை

இதையடுத்து இருதரப்பு நாடுகள் குறித்து பிரதமர் மோடியுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து, மும்பையில் உள்ள வர்த்தக பிரதிநிதிகள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களையும் கனடா பிரதமர் மார்க் கார்னி சந்தித்துப் பேசினார்.

இருநாடுகளுக்கு இடையில், எரிசக்தி,கல்வி, விவசாயம், வர்த்தகம் முதலான துறைகளின் உறவை வலுப்படுத்துவது குறித்தான பேச்சுவார்த்தை நடந்தது.

ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

பின்னர் பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன்பிறகு இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

கனடா - இந்தியா நல்லுறவு

கனடா பிரத்மர் மார்க் கார்னியை இந்தியாவிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், அவர் பிரதமராக இந்தியாவிற்கு வருவது இது தான் முதல் முறை என்றும் அதனால் பிரதமர் மார்க் கார்னியின் வருகையை முக்கிய மைல்கல்லாகக் கருதுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜி 7 மாநாட்டில் மார்க் கார்னி

மேலும் தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு கனடாவில் ஜி7 மாநாடு நடைபெற்ற போது, தன்னையும் தனது குழுவினரையும் மார்க் கார்னி அன்போடு உபசரித்ததாகவும் அதனால் அவரை அதே அன்புடன் வரவேற்பது தனது பாக்கியம் என்றும் நெகிழ்ச்சியாகக் கூறினார்.

யுரேனியம் தொடர்பான ஒப்பந்தம்

பின்னர், வரலாற்று சிறப்புமிக்க யுரேனியும் தொடர்பான ஒப்பந்தத்தில், இந்தியாவும் கனடாவும் கையெழுத்திட்டு உள்ளதாகவும், இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்தார். ( இந்தியா- கனடா இடையே 2030 ஆம் ஆண்டிற்குள் 50 மில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயம்)

மேற்காசிய நிலவரம் கவலை

மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் சூழல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது.

மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு அரசுகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என்றும் டகூறினார்.

சவால்களை ஏற்படுத்தும் பயங்கரவாதம்

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் மட்டுமல்ல பயங்கரவாதம் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பேராபத்தானது, கடும் சவால்களை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போரை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும், என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.