PM Modi expresses pride over success of G20 summit in South Africa 
இந்தியா

G-20 மாநாடு வெற்றி, நிலையான வளர்ச்சி இருக்கும்: பிரதமர் பெருமிதம்

தென் ஆப்ரிக்காவில் நடந்த ஜி20 மாநாடு வெற்றி பெற்றதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Kannan

ஜி 20 உச்சி மாநாடு

“The successful Johannesburg G20 will contribute to a prosperous and sustainable planet. My meetings and interactions with world leaders were very fruitful" :

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கிற்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி சென்று இருந்தார். அங்கு நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றினர்.

தலைவர்களுடன் சந்திப்பு

தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, வர்த்தகம், முதலீடு, அரிய வகை கனிமங்கள் இறக்குமதி, செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பேச்சு நடத்தினார்.

இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பானின் சனே டகைச்சி மற்றும் கனடாவின் மார்க் கார்னி உள்ளிட்ட தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை பிரதமர் மோடி நடத்தினார்.

மூன்று நாட்கள் தென்னாப்பிரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டில்லி திரும்பினார். இந்த பயணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது<

ஜி.20 மாநாடு வெற்றி

”வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் ஜி20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும். உலகத் தலைவர்களுடனான எனது சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை இது வலுப்படுத்தி இருக்கிறது.

தென்னாப்பிரிக்க மக்களுக்கு நன்றி

ஜி20 உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தென்னாப்பிரிக்காவின் அற்புதமான மக்கள், அதிபர் சிறில் ராமபோசா மற்றும் தென்னாப்பிரிக்கா அரசிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

==============