PM Modi releases commemorative coin, postage stamp to mark centenary of Sri Sathya Sai Baba 100th Birthday Celebrations in Puttaparthi Google
இந்தியா

மோடி: சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா: சிறப்பு நாணயம், அஞ்சல் தலை

Sri Sathya Sai Baba 100th Birthday : ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

Kannan

ஸ்ரீ சத்யசாய் பாபா

PM Narendra Modi Visit Sri Sathya Sai Baba in Puttaparthi : ஸ்ரீ சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926, நவம்பர் 23ம் தேதி பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார்.

சாய்பாபா போதனைகள்

புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை மூலம் இலவச மருத்துவ சிகிச்சை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால் ஈர்க்கப்பட்டு பக்தர்களாகி வருகின்றனர்.

சாய்பாபா 100 ஆண்டு விழா

புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்(Sri Sathya Sai Baba Centenary Celebrations 2025 Date in Tamil) கடந்த 13ம் தேதி தொடங்கியது. வரும் 24 வரை கோலாகலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் இவற்றில் பங்கேற்று வருகின்றனர்.

புட்டபர்த்தியில் பிரதமர் மோடி

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில், பிரதமர் மோடி(PM Modi in Sri Sathya Sai Baba 100th Birthday Celebrations), ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புட்டபர்த்தி வந்த பிரதமர் மோடி ஸ்ரீ சத்ய சாய்பாபா மகா சமாதியில் தியானத்தில் ஈடுபட்டார்.

சிறப்பு நாணயம் வெளியீடு

நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அவர், 100 ரூபாய் சிறப்பு நாணயம்(Sri Sathya Sai Baba 100 Coin) மற்றும் அஞ்சல் தலையை வெளியிட்டார். பிரபல பாடகி சுதா ரகுநாதன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, இசைக்கலைஞர் சிவமணியின் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, நாட்டியக்கலைஞர்களின் நடனங்களை பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர்.

முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

நூற்றாண்டு விழாவில், நடிகை ஐஸ்வர்யா ராய், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் சத்ய சாய்பாபாவின் மகிமைகளை பற்றி உரையாற்றினர். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் பேசினர். சத்ய சாய்பாபாவின் பெருமைகள் பற்றியும், அவரது சேவை குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

=====