பிரதமர் மோடி வெளிநாடு பயணம் :
PM Modi UK Visit 2025 : இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்த பல்வேறு நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுவதோடு, முதலீட்டுக்காக தொழில் முனைவோர்களையும் சந்திக்கிறார்.
பிரிட்டன், மாலத்தீவுக்கு மோடி பயணம் :
இதன் ஒருபகுதியாக பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்(PM Modi Tour To Maldives) மேற்கொள்ள உள்ளார். டில்லியில் இருந்து ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி புறப்படுகிறார். முதலில், பிரிட்டன் சென்று, அங்கு முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் :
இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு கார்கள் ஏற்றுமதி செய்வதை எளிதாக்கும். பிரிட்டன் பயணத்தை முடித்து விட்டு, பிரதமர் ஜூலை 25, 26ம் தேதிகளில் மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொள்வார். அங்கு அவர் அந்நாட்டின் 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.
மேலும் படிக்க : இந்தியாவில் கூடுதலாக மழைப்பொழிவு: வானிலை மையம் தகவல்
மாலத்தீவு சுற்றுப் பயணம் :
பிரதமர் மோடியின் பயணம் இந்தியா-மாலத்தீவு(India Maldives) ஆகிய இருநாடுகளுக்கு இடையே உறவுகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலத்தீவு அதிபர் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
இறக்குிமதிக்கு கூடுதல் வரி, பிரிக்ஸ் நாடுகளுக்கு 10 சதவீத வரி என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்தி வரும் நிலையில், பிரிட்டன் - இந்தியா இடையே மேற்கொள்ளப்பட இருக்கும் தடையற்ற ஒப்பந்தம், பெரும் மாற்றங்களை கொண்டு வரும் எனத் தெரிகிறது.
====