PM Modi's Big Message to Corporates: Increase Salaries and Create More Jobs! Google
இந்தியா

மோடி கேள்வியால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நெருக்கடி : ஊழியர்களுக்கு சம்பளம், வேலைவாய்ப்பை அதிகரிக்க யோசனை.!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கொடுத்தும் ஊழியர்களின் சம்பளமும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கவில்லையா? FICCI மாநாட்டில் பிரதமர் மோடி நேரடியாக கேள்வி ...

NARENDRAN K

பிரதமர் மோடி பேச்சு :

நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நேற்று (நவம்பர் 19) நடைபெற்ற FICCI அமைப்பின் 100-வது ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்துப் பேசினார்.

கார்ப்பரேட் வரி 30%-லிருந்து 22%-ஆக குறைப்பு :

கடந்த 2014-ம் ஆண்டு 30 சதவீதமாக இருந்த அடிப்படை கார்ப்பரேட் வரி தற்போது 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

அதேபோல, தனிநபர் வருமான வரியில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தீங்களா :

இவ்வளவு வரிச்சலுகைகளை அரசு வழங்கியுள்ள நிலையில், அதன் பலன் ஊழியர்களுக்கும் சென்றடைந்துள்ளதா என்று கார்ப்பரேட் நிறுவனங்களை பார்த்து பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தீர்களா அவர்களுடைய சம்பளத்தை உயர்த்தினீர்களா என்று கேள்வி எழுப்பிய அவர், அரசு மட்டும் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நிறுவனங்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வேலைவாய்ப்பை உருவாக்க நிறுவனங்களுக்கு அழைப்பு :

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களுடைய முதலீடுகளையும் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும் என்றும், இந்தியாவை உலகளாவிய சந்தையில் போட்டியிடும் நாடாக மாற்றுவதற்கு நிறுவனங்கள் தயாராக வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

====================