PM Modi Participated Samudra Se Samriddhi Event in Gujarat Visit in Tamil ANI
இந்தியா

’இந்தியாவின் உண்மையான எதிரிகள்’ : எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை

PM Modi Participated Samudra Se Samriddhi Event in Gujarat Visit: பிற நாடுகளை சார்ந்து இருப்பவர்கள் தான் இந்தியாவின் உண்மையான எதிரிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியிருக்கிறார்.

Kannan

சந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும் :

PM Modi Participated Samudra Se Samriddhi Event in Gujarat : குஜராத்தின் பாவ் நகரில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நவராத்திரி பண்டிகை தொடங்கவிருக்கும் நிலையில், ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக சந்தைகள் அதிக வளர்ச்சியை சந்திக்கும். எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்த வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

தன்னம்பிக்கை மட்டுமே ஒரே மருந்து :

இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே ஒரு மருந்து தன்னம்பிக்கை மட்டும்தான். வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி நடந்து இருக்கிறது. நமது இளைஞர்களுக்கு காங்கிரஸ் பெரிய தீங்கினை இழைத்தது. உலகம் முழுவதும் பொருட்களை அனுப்புவதற்காக இந்தியா வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6 லட்சம் கோடி செலுத்துகிறது. இது நமது பாதுகாப்புத்துறை பட்ஜெட்டுக்கு சமமான தொகையாகும்.

பெரிய கப்பல்களை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் கடல்சார் துறையை வலுப்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. உலகளாவிய கடல்சார் சக்தியாக இந்தியா எழுச்சி பெற வேண்டும் என்பதே நமது இலக்கு.

மேலும் படிக்க : Modi 75: தூய்மை இந்தியா’ 50 கோடி பேர் ஏற்றம்:குப்பை இல்லாத பாரதம்

மற்றவர்களை சார்ந்திருப்பதே நமது எதிரி :

திறமைக்கு இந்தியாவில் ஒருபோதும் பற்றாக்குறை இருந்ததே இல்லை. ஆனால் காங்கிரசுக்கு ஆட்சி காலத்தில் அதனை பயன்படுத்த திறனில்லை. இன்று, இந்தியா உலகளாவிய சகோதரத்துவ உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமக்கு எந்த எதிரியும் இருந்தால், அது மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுதான் நமது மிகப்பெரிய எதிரி. இந்தியாவின் இந்த எதிரியைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபட வேண்டும்” இவ்வாறு அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

===============