PM Modi with Vladimir Putin in SCO Summit 2025 https://x.com/narendramodi
இந்தியா

மோடி-புதின் ஒரே காரில் பயணம் : 50 நிமிடங்கள் ஆலோசனை, USA பதற்றம்

PM Modi with Vladimir Putin in SCO Summit 2025 : ஷாங்காய் மாநாட்டிற்கு பிறகு புதினும், மோடியும் ஒரே காரில் பயணித்து, 50 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தியது, அமெரிக்காவை பதற்றமடைய செய்திருக்கிறது.

Kannan

ஷாங்காய் உச்சி மாநாடு :

PM Modi with Vladimir Putin in SCO Summit 2025 : சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அமைப்பில் இடம் பெற்று இருக்கும் மற்ற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். தீவிரவாதத்திற்கு எதிராக இந்த மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது.

மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்தினார். இது ஆக்கப்பூர்மாக அமைந்தது. அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து அவர்கள் விவாதித்தாக கூறப்படுகிறது.

புதினுடன் ஒரே காரில் மோடி :

ஷாங்காய் மாநாட்டுக்குப் பின்பு உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள அதிபர் புதினுடன் ஒரே காரில் பயணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த மோடி, “இந்திய - ரஷ்ய இருதரப்பு ஆலோசனைக்காக நானும், புதினும் ஒரே காரில் பயணிக்கிறோம். அவருடனான ஆலோசனைகள் எப்போதுமே ஆழமான புரிதலைக் கொண்டவை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

50 நிமிடங்கள் ஆலோசனை :

மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்ற பிறகும், இருவரும் காரை விட்டு இறங்கவில்லை. 50 நிமிடங்கள் வரை அவர்களை விரிவான ஆலோசனை நடத்தினர். காரில் அமர்ந்தவாறே அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா பதற்றத்தில் ஆழ்ந்து இருக்கிறது.

பதற்றத்தில் அமெரிக்கா :

அண்மையில், அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது 50% வரி விதித்தது(US Tariffs on India). அதற்கு ரஷ்யாவுடனான நட்பை, அங்கிருந்து இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக் காட்டியது. இந்நிலையில், ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி நடத்தியுள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உலக அளவில் கருதப்படுகிறது.

‘ஹாங்கி எல்-5’ காரில் மோடி பயணம் :

சீன அதிபர் ஜின்பிங் ‘ஹாங்கி எல்-5’ என்ற பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். ஷாங்காய் உச்சி மாநாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்த இந்தக் கார் வழங்கப்பட்டு இருக்கிறது. தனக்கு நெருக்கமான தலைவர்களுக்கு மட்டுமே சீன அதிபர் ஜி ஜின்பிங்(Xi Jinping Hongqi Car) இந்தக் காரை அளிப்பார் எனக் கூறப்படுகிறது. அந்த வகையிலும் மோடி உலக அளவில் மீண்டும் கவனம் பெற்றுள்ளார். 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், மாநாட்டில் பங்கேற்ற நிலையில், மோடியின் பயணத்துக்கு மட்டுமே சீன அதிபரின் கார் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

======