ஆர்எஸ்எஸ் வரலாறு :
PM Modi Unveils RSS Centenary Stamp Coin : 1925ஆம் ஆண்டில் நாக்ப்பூர் K. B. Hedgewar என்று அறியப்படும் கேஷவ் பாலிறாம் ஹெட்கேவர் தலைமையில் ஹிந்து வரலாறு, பண்பாடு, சமூக ஒற்றுமை ஆகியவற்றைப் பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நாள் வரை 100 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதன் நூற்றாண்டு கொண்டாட்டம் மிகச்சிறப்பாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனை இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் பாஜக உள்ளிட்ட பல வித இந்துதுவா கட்சிகள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி 100 ரூபாய் நாணயம் நினைவு அஞ்சல் தலை உள்ளிட்டவைகளை வெளியிட்டார்.
ஆர்எஸ்எஸ் நினைவு அஞ்சல் தலை வெளியீடு :
டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், பிரதமர் மோடி, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில், ஆர்எஸ்எஸ் நினைவு அஞ்சல் தலை(RSS Centenary Postal Stamp, Coin) மற்றும் 100 ரூபாய் நாணயத்தைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமர் மோடி உரை :
இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி(Narendra Modi), ஆர்எஸ்எஸ் என்றால் தீமையை வென்றது என்ற பொருளைக் கொண்டது எனக் கூறினார். நாட்டிற்காக ஆர்எஸ்எஸ் பல சேவைகளைச் செய்துள்ளது என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார்.
விஜயதசமி நாளில் தொடக்கம்
இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியை குறிக்கும் பண்டிகை விஜயதசமி எனக்கூறிய அவர், 100 ஆண்டுகளுக்கு முன்பு விஜயதசமி நாளில்தான்(RSS Foundation Day on Vijayadashami 2025) ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறுவப்பட்டது எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க : ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நாடு முழுவதும் மாநாடுகள் நடத்த திட்டம்
ஆர்எஸ்எஸ் தேசத்தை கட்டியெழுப்பும் :
ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, தேசிய நலனே முதன்மையானது என்ற கொள்கையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்பட்டு வருவதாகக் பெருமை சூடினார். மேலும், உயர்ந்த குறிக்கோளைப் பின்பற்றி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தேசத்தை கட்டியெழுப்பும் என்று கூறினார்.
===========