PM Narendra Modi Wishes LK Advani 90th Birthday Celebration Google
இந்தியா

LK Advani : எல்.கே.அத்வானி பிறந்தநாள்- அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

LK Advani : முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி 98வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Bala Murugan

லால் அத்வானி :

PM Modi Wishes LK Advani 90th Birthday : சுதந்திரத்துக்கு முந்தைய ஒருங்கிணைந்த இந்தியாவின் கராச்சியில் பிறந்த எல்.கே.அத்வானி இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் தொண்டராக சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். பாஜகவை உருவாக்கியதில் இவரின் பங்கு அளப்பரிவை. இவர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உள்துறை அமைச்சர் மற்றும் இந்தியாவின் துணை பிரதமர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை விகித்தவர்.

கட்சி பணியில் இருந்து விலகல்

வயது மூப்பு காரணமாக தீவிர கட்சிப் பணிகளில் இருந்து அண்மைக் காலமாக அவர் விலகி உள்ளார். இந்தநிலையில் எல்.கே.அத்வானி, இன்று தனது 98வயதில் அடித்து எடுத்து வைத்துள்ளார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வாழ்த்து

அதன்படி, லால் அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், எல்.கே.அத்வானி நாட்டின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் என புகழாரம் தெரிவித்துள்ளார். அத்வானி நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

எல்.முருகன் வாழ்த்து

இவரைத்தொட்ர்ந்து, மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,முன்னாள் துணைப் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான மதிப்பிற்குரிய ஸ்ரீ.எல்.கே. அத்வானி ஜி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ள அவர், சிறந்த அரசியல்வாதி, தொலைநோக்கு பார்வை கொண்டவர்.

உண்மையான தேசபக்தர் அத்வானி ஜி என்றும் பாரதத்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ள அவர் தன்னலமற்ற கடமை மற்றும் உறுதியான கொள்கைகளை அடையாளப்படுத்துகிறார் அத்வானி ஜி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரது நல்ல ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்தை சமர்ப்பித்துள்ளார்.