PM Narendra Modi's Swachh Bharat Mission in Tamil 
இந்தியா

Modi 75: தூய்மை இந்தியா’ 50 கோடி பேர் ஏற்றம்:குப்பை இல்லாத பாரதம்

Modi's Swachh Bharat Mission : பிரதமர் மோடி, 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்த தூய்மை இந்தியா திட்டம், நாடு முழுவதும் மாற்றத்தை கொண்டு வந்து 50 கோடி மக்களின் வாழ்க்கையை ஏற்றமடைய செய்து இருக்கிறது.

Kannan

மக்கள் திட்டமாக மாறிய தூய்மை இந்தியா :

PM Narendra Modi's Swachh Bharat Mission : 2014ம் ஆண்டு ’ஸ்வச் பாரத்’ என்ற பெயரில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கையில் துடைப்பத்தை பிடித்து அவர் மேற்கொண்ட இந்த உன்னத முயற்சி, மக்களின் திட்டமாக மாறி, இந்தியா முழுவதும் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது. இதன் மூலம் நாடும், மக்களும் அடைந்த பயன்களை பார்க்கலாம்.

திறந்தவெளி கழிவறைகளுக்கு மூடுவிழா:

இந்தியாவின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், லட்சக் கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டன, கிராமங்கள் திறந்தவெளி கழிவறைகள் இல்லாதவையாக மாற்றப்பட்டன. குப்பைத் தொட்டிகள் மீட்டெடுக்கப்பட்டு, தூய்மை கடைபிடிக்கப்பட்டது. துப்புரவு பணியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டதால், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டது. தூய்மை இந்தியா என்பது கண்ணியம், சுகாதாரம் மற்றும் நவீன இந்தியாவிற்கான மக்களின் நோக்கமாக மாறியது.

நாடு முழுவதும் 10 கோடி கழிப்பறைகள்:

கிராமப்புற சுகாதாரத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, 2014 முதல் 2020க்குள் 10 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டன(Swachh Bharat Mission Gramin Toilet). 5 ஆண்டுகளில் திறந்தவெளி கழிப்பறைகள் 60 சதவீதத்தில் இருந்து, 19 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த முயற்சியின் காரணமாக 50 கோடி மக்களின் வாழ்க்கைத்தரம் மாறியது. அனைத்து மாவட்டங்களும் 30 சதவீதம் கழிப்பறை வசதி கொண்டவையாக தரம் உயர்ந்தன. குழந்தைகள் இறக்கு விகிதம் 5.3 சதவீதமாக குறைக்கப்பட்டது. 5 வயதுகுட்பட்டோர் இறப்பு விகிதமும் 1.1 புள்ளிகள் குறைந்துள்ளது. சுகாதாரப் பணியாளர்களின் நலன் காக்கும் திட்டங்கள், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி, தூய்மையுடன் கண்ணியத்தை மேம்படுத்தியது.

தூய்மை இந்தியா - கண்ணியம், வளர்ச்சி :

தூய்மை இந்தியா திட்டம்(Swachh Bharat Mission) மூலம், வெளிப்புற மலம் கழித்தல் இல்லாத கிராமங்களை சேர்ந்த மக்கள் சுகாதாரதிற்காக செலவிடப்படும் தொகையில், ண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சேமித்து இருக்கிறார்கள். ஸ்வச் பாரத் திட்டம் தூய்மை, சுகாதாரம், கண்ணியம் மற்றும்

வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே உள்ள நெருங்கிய தொடர்பை நிரூபித்து உள்ளது. இது வெறும் தூய்மை மட்டும் கிடையாது. அவமானத்தை பெருமையாகவும், புறக்கணிப்பை அழகாகவும், விலக்கத்தை கண்ணியமாகவும் மாற்றி அமைப்பதே இதன் இலக்கு. அதை நாடு அடைந்து வருகிறது.

செப்.25ல் ஷ்ரம்தான் நிகழ்ச்சி :

குப்பைகள் இல்லாத இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக 25ம் தேதி நாடு தழுவிய அளவில் ஷ்ரம்தான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பள்ளி குழந்தைகள், இளைஞர் குழுக்கள், சமூக ஆர்வலர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். வெறும் தெருக்களை சுத்தம் செய்வது மட்டும் இதன் நோக்கம் கிடையாது. ஒரு சமூக பணிக்காக இந்தியாவை இணைக்கும் நல்ல முயற்சி. விளக்குகளை ஒளிரவிட்டு தீபாவளியை கொண்டாடுவது போல, பண்டிகைகள் தூய்மை மற்றும் பொறுப்புடன் பிரகாசிக்க வேண்டும் நமக்கு உணர்த்தும் நிகழ்ச்சிதான் இது.

மக்களின் வாழ்வில் வசந்தம் :

தூய்மை என்பது ஒரு கொண்டாட்டமாக மாறும்போது, அது திருவிழாவாக வடிவம் பெறுகிறது. இந்த நிகழ்வு தூய்மையை மேம்படுத்தி, இருண்ட, அழுக்கான, புறக்கணிப்பட்ட இடங்களை அனைவரும் பயன்படுத்தும் பொது சொத்தாக மாற்றுகிறது. சுத்தமான பொது இடங்கள், பசுமை விழாக்களை கொண்டாடும் பகுதிகளாக மாறி, மக்கள் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

தூய்மை என்பதை வெறும் அழகு சார்ந்த ஒன்றாக பார்க்காமல், சுகாதாரம், நோய்கள் குறைப்பு, மேம்பட்ட வாழ்க்கை, கிராம பெண்களின் சுகாதாரம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பார்த்தால், கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்பது புரியும். குப்பைகள் இல்லாமல் தூய்மைப்படுத்தப்படும் இடங்கள், சுற்றுலாவுக்கு வழிகாட்டுவது மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சிகும் காரணமாக அமைகின்றன. இதன் மூலம் கிடைக்கும் முதலீடுகள், வேலை வாய்ப்பினை உருவாக்கி தருகின்றன.

மக்களுக்கான மரியாதை தூய்மை இந்தியா :

தூய்மையான இந்தியா, வெறும் நெடுஞ்சாலைகள் மற்றும் வானளாவிய கட்டிடங்கள் மட்டும் கிடையாது. சுத்தமான தெருக்கள், பாதுகாப்பான சுகாதாரம், நகரங்களை தூய்மையாக இயங்க வைப்பவர்களுக்கு மரியாதை அளிப்பதாகும்.

2047க்குள் ஆரோக்கியமான இந்தியா :

2014ம் ஆண்டு தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி தொடங்கிய தூய்மை இந்தியா திட்டம் 2024ம் ஆண்டை நோக்கி செல்லும் போது, இந்தியாவில் ஆரோக்கியமான மக்கள்தான் இருப்பார்கள். கிராமங்கள் தூய்மையாக இருக்கும், நகரங்கள் கண்ணியம் மிக்க சமூகத்தின் அடித்தளமாக செயல்படும்.

மக்களின் பங்களிப்புடன் தூய்மை இந்தியா :

75வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அளித்த புதிய பரிசு என்னவென்றால், தூய்மை என்பது ஒரு நிகழ்வு கிடையாது. அது வாழ்க்கை முறை என்பதுதான். தூய்மை பாரதம் உண்மையான மக்கள் இயக்கமாக உருவெடுத்து, ஒவ்வொரு குடிமகனும் சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதில் தங்களுக்கான பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க : "Modi 75" : 140 கோடி இந்தியரின் அடையாளம் : செல்வாக்கு மிக்க தலைவர்

இந்தியாவை மாற்றியமைக்கும் ஸ்வச் பாரத் :

தூய்மை என்பது அனைவரின் அர்ப்பணிப்பாலும் கிடைப்பது என்ற உயர்ந்த நோக்கத்துடன் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை நாடு கொண்டாடுகிறது. பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 தொடங்கி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று முடிவடையும் இந்த பிரசாரம், தூய்மை பற்றிய தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டு, கோடிக்கணக்கான மக்களின் பங்களிப்போடு, இந்தியாவை மாற்றி அமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

=============