https://x.com/narendramodi/status/1933110947553681853
இந்தியா

விமான விபத்து குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை

குஜராத் விமான விபத்து குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Kannan

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது இதயத்தை நொறுக்கும் செய்தி என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டோர் குறித்தே தனது சிந்தினை இருப்பதாகவும், அமைச்சர்களுடன், அதிகாரிகளுடன் தொடர்ந்து விவரங்களை கேட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் மோடி உறுதியளித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், குஜராத் மாநில அதிகாரிகள், ஏர் இந்தியா நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு வருகிறார்.

அகமதாபாத் விமான விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பல்வேறு மாநில முதல்வர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

----