Anbumani Ramadoss on CM MK Stalin Visit 
இந்தியா

10 லட்சம் கோடி முதலீடு ‘பச்சை பொய்’ : அன்புமணி ஆவேசம்

Anbumani Ramadoss on CM MK Stalin Visit : தேர்தல் வாக்குறுதிகளை போலவே முதலீட்டிலும் திமுக பொய் சொல்வதாகவும், விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம் என்று கூறிய அன்புமணி தெரிவித்துள்ளார்.

Kannan

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் :

Anbumani Ramadoss on CM MK Stalin Visit : முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10.62 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

நடைமுறைக்கு வராத முதலீட்டு ஒப்பந்தங்கள் :

அவரது இந்த கருத்து குறித்து அறிக்கை மூலம் பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி இருக்கிறார். “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்கள் 10% கூட நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் அனைத்து முதலீடுகளும் வந்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.

பொய் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின் :

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்ற முதல்வர், தான் போட்ட அனைத்து ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாக கூறியது அப்பட்டமான பொய். திமுக அரசின் இந்த பொய் கதைகளை பாமக பலமுறை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனாலும் தி.மு.க அரசு தொடர்ந்து பொய் கூறி வருகிறது.

வெள்ளை அறிக்கை தாங்க :

தொழில் முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது. திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் முதலீட்டு விவரங்களை வெளியிடலாம். ஆனால் அவர்கள் பொய் மட்டுமே முதலீடு செய்துள்ளனர். இந்த மோசடிகள் விரைவில் அம்பலமாகும்.

மேலும் படிக்க : Anbumani : மு.க.ஸ்டாலின் மன்னிப்புக்கேட்க வேண்டும் : அன்புமணி

10 சதவீதம் கூட செயல்பாட்டிற்கு வரவில்லை :

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 922 முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்(CM MK Stalin) கூறியிருக்கிறார். மேலும், தான் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாகவும் அவர் சொன்னார். ஆனால், உண்மையில் 10% ஒப்பந்தங்கள் கூட இன்னும் நிறைவேறவில்லை. உண்மை இவ்வாறு இருக்க பச்சை பொய் கூறக் கூடாது,” என்று அன்புமணி ராமதாஸ்(Anbumani on MK Stalin Visit) தெரிவித்துள்ளார்.

=====