Police swift arrest of 3 individuals in connection with shots fired at Bollywood actor Tiger Shroff source:thamizhalai,ai generated
இந்தியா

”ஓடும் ரயிலில் 3 பேர் கைது” : நடிகர் ஷெராஃப் மீது தாக்குதல் நடத்திய பிஷ்னோய் கும்பல் : பாலிவுட்டிற்கு அச்சுறுத்தல்..!

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Kannan

டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு

ிரபலமான பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம், சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடும் பிஷ்னோய் கும்பல், இந்த தாக்குதலை அரங்கேற்றியதாக பகிரங்கமா அறிவிச்சு பரபரப்பை கிளப்பி இருக்கு.

உலகை ஈர்க்கும் இந்தி சினிமாக்கள்

இந்திய சினிமாவில உலக அளவில் கவனம் ஈர்ப்பது அப்படின்னா, அது இந்தி படங்கள் தான். அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மட்டுமல்லாம, அரபு நாடுகளிலும் இந்த படங்களுக்கு மவசு கொஞ்சம் அதிகம் தான்.

ஆனா, 10 ஆண்டுகளாக தென்னிந்திய படங்களும் பான் இந்தியா படங்களா எடுக்கப்படுறதால உலக அளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இதற்கு ஏத்தாபோல, இந்தி நடிகர்களும் தமிழ், தெலுங்கு படங்கள்ல்ல நடிச்சு வர்றாங்க. அப்படிப்பட்ட ஒருத்தர் தான் ஜாக்கி ஷெராஃப்.

ஜக்கு தாதா - ஜாக்கி ஷெராஃப்

ஜக்கு தாதா என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர், 'ஹீரோ' (Hero) என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய ஸ்டாரா இருக்காரு. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட 13 மொழிகளில் 220க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சு இருக்காரு ஜாக்கி ஷெராஃப்.

ஜாக்கி ஷெராஃப் மகன் டைகர் ஷெராஃப்

இவரோட மகன் தான் டைகர் ஷெராஃப். தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி 16 அடி பாயும் அப்படின்னு சொல்வாங்க. அதைப்போல, அப்பாவுக்கு சளைக்காமல், டைகர் ஷ்ராஃப், இன்றைய நிலையில பாலிவுட்டின் உச்சப்பட நட்சத்திரங்களில் ஒருத்தர்.

பன்முகத்தன்மை கொண்ட நடிகர்

முன்னணி நடிகர், நடனக் கலைஞர், மார்ஷியல் ஆர்ட்ஸ் நிபுணர் அப்படின்னு பன்முகத்தன்மை கொண்டவரு. 2014-ல் வெளியான ' ஹீரோபந்தி ' என்ற அதிரடி காதல் திரைப்படத்தின் கதாநாகனான இவர், முதல் படத்திலேயே, சிறந்த ஆண் அறிமுக நட்சத்திரத்திற்கான IIFA விருதை வென்று காட்டினாரு.

அடுத்தடுத்து பாலிவுட் படங்களில தனது திறமையை வெளிப்படுத்திய டைகர் ஷ்ராஃபுக்கு, சில படங்கள் தோல்வியா அமைஞ்சதையும் மறுக்க முடியாது.

ஒரு பக்கம் நடிப்புல பிசியா இருந்தாலும், தீராத காதல் கொண்ட தற்காப்பு கலைக்கா, ஷெராஃப் மேட்ரிக்ஸ் ஃபைட் நைட் (MFN) என்ற கலப்பு தற்காப்புக் கலை அமைப்பை நிறுவினார் .

2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபலங்கள் 100 பட்டியலில் இடம்பெற்று அசத்தினாரு டைகர் ஷெராஃப்.

குற்றச்செயல்களில் பிஷ்னோய் கும்பல்

பொதுவா, குற்றவியல் சம்பவங்களை அரங்கேற்றும் கும்பல்களிடம் இர்நுத பாலுவுட் நடிகர்களுக்கு எப்போதுமே அச்சுறுத்தல் அதிகம் தான். சில சமயங்களில் நிழல் உலக தாதாக்களும், மாஃபியா கும்பல்களும் கூட கைவரிசை காட்டுவது வழக்கம். எனவே, தான் பாலுவுட் உச்ச நட்சத்திரங்கள் பாதுகாப்பு இல்லாம எங்குமே போறது கிடையாது.

மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

இந்தநிலையில தான் மும்பையில, ஜூஹூ (Juhu) பகுதியில் உள்ள புஷ்பா நர்சி பூங்கா அருகே இருக்கிற மைதானத்தில் கால்பந்து விளையாட்டுல கலந்து கிட்டாரு டைகர். இதை பார்க்க அவரது ரசிகர்களும் திரண்டு இருந்தாங்க. மேட்ச் முடிஞ்சதும். அவர் கிளம்ப, ரசிகர்கள் கூட்டத்தால, காரானது மெதுவா ஊர்ந்து சென்றது.

உயிர் தப்பினார் டைகர்

அப்போது தான் ஒரு விபரீதம் நிகழ்ந்துச்சு. மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், திடீரென்று டைகர் ஷெராஃபை குறிவச்சு துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளினாங்க. அதிர்ஷ்வசமா, குண்டுகள் படாம, தப்பிச்சாரு ஷெராஃப். அவருக்கு லேசான காயங்கள் தான் ஏற்பட்டது.

இரண்டு பேர் படுகாயம்

5 முதல் 7 ரவுண்டுங்க வர அவங்க சுட்டதுல கார் டிரைவர் ஃபிர்தோஷ் (Firdosh) அருகில் நின்னுக்கிட்டு இருந்த உமேஷ் சவான் (Umesh Chavan) ஆகியோர் குண்டுகளால் துப்பாக்கியால் இருவருக்கு துப்பாக்கி குண்டுக்காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர்றாங்க.

பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு, பிஷ்னோய் அப்படிங்க குற்றச் செயல்களில ஈடுபடுற கும்பல் பொறுப்பேத்து இருக்கு. இந்த கும்பல வழி நடத்துற லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாப்பைச் சேர்ந்த நிழலுலக தாதா. சிறையில் இருக்கும் இவரு, அங்கிருந்தபடியே, ஒரு கும்பலை இயக்கி வர்றாரு.

கூலிப்படையாக செயல்படும் பிஷ்னோய்

பாலிவுட் பிரபலங்கள், பெரும் பணக்காரர்களை மிரட்டி பணம் பறிப்பது, கூலிப்படையாக செயல்பட்டு வேலை பார்ப்பது தான் இவங்களோட வேலை.

சல்மான் கானை ஆதரிப்போருக்கு குறி

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானோடு தொடர்பில் இருப்பவர்கள் அல்லது அவருடன் பணியாற்றுபவர்கள் எங்களின் அடுத்த இலக்\கு அப்படின்னு பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து எச்சரிச்சு வந்தது. எனவே, டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவே காரணமா இருக்கமா, அப்படின்னு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு இருக்காங்க.

மூன்று பேர் கைது, தீவிர விசாரணை

இந்தநிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவங்களில 3 பேரை போலீசார் கைது செஞ்சு இருக்காங்க. நேபாளத்திற்கு தப்ப முயன்ற போது, ஓடும் ரயிலில் ராஜஸ்தானில் இவங்கள போலீசார் சுத்தி வளைச்சாங்க. அவங்க கிட்ட தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருது.

கூலிப்படை கும்பல்

இவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த ரேஹான் என்கிற சுக்கா, பிஹாரைச் சேர்ந்த ஹிருத்திக் குர்மி ஆகியோர் பிஷ்னோய் கும்பலால் டைகர் ஷெராஃப்பை கொலை செய்வதற்காக கூலிப்படையா செயல்பட்டவங்க அப்படிங்றது உறுதியாகி இருக்கு.

நடிகர் சல்மான் கானுக்கு எதிரா கொலை மிரட்டல்கள், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை, பாபா சித்திக் கொலையில பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருக்கு.

பிஷ்னோய் கும்பல் - கனடாவில் தடை

கனடாவில் காலிஸ்தான் ஆதரவு மற்றும் பயங்கரவாதத் தொடர்புகள் இவங்களுக்கு இருக்கிறதால, அந்நாட்டு அரசு அரசு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிச்சு, தடை பண்ணி இருக்கு.

பாலிவுட்டும், நிழல் உலக தாதாக்களும்

இந்திய திரையுலகில, நிழல் உலக தாதாக்கள், குற்றச்செயல் கும்பல்களுக்கும் ஒரு காலத்துல நெருங்கிய தொடர்பு இருந்திச்சு, பாலிவுட் சினிமாக்களில், மாஃபியா கும்பல்கள் பணம் கொட்டுறதாவும் சொல்லப்பட்டுச்சு.

கடத்தல் மன்னன் அப்படின்னு அழைக்கப்படுற ஹாஜி மஸ்தானுக்கும், பாலிவுட்பாலிவுட் நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்களோட நல்ல நட்பு இருந்தது. அடுத்ததா தாவூத் இப்ராஹிம், 'டி-கம்பெனி' (D-Company) தலைவார இருந்த அவரு, பாலிவுட் படங்களுக்கு வெளிநாட்டு உரிமை மூலம் நிதி வழங்குதல், நடிகர்களை மிரட்டி பணம் பறித்தல் அப்படின்னு கொடி கட்டி பறந்தாரு.

தாவூத் இப்ராஹிம்

துபாயில இவர் இந்தி நடிகர்கள சந்திச்சதும் பரபரப்பான செய்தியானது. 1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புக்கு பிறகு தாவுத் இப்ராஹிம் இந்தியாவில் இருந்து வெளியேறி தலைமறைவானாரு.

அபு சலீம்

இவரது கூட்டாளியான அபு சலீம் (Abu Salem), பாலிவுட் தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் மிரட்டி பணம் பறிச்சு வந்தாரு. பிரபல இசையமைப்பாளர் குஷன் குமார் படுகொலை வழக்கில் இவருக்குத் தொடர்பு இருந்தது.

சோட்டா ராஜன்

இவரை போலவே தாவூத்தின் இன்னொரு கூட்டியாக இருந்து பின்னர் தனி கேங்க் தொடங்கிய சோட்டா ராஜனும் பாலிவுட்டில் முதலீடு, பணம் பறித்தல், ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தாரு.

இப்படி, கேங்ஸ்டர்கள், குற்ற கும்பல்களின் ஆதிக்கம் பாலிவுட்டில் இன்னும் கூட பெரும் தலைவலியாகவே இருக்கு. இதனால், பொதுமக்களோட பாதுகாப்பும் கேள்விக்குறியாகுது. இதை ஒடுக்கணும்னா, மகாராஷ்டிரா அரசும், மத்திய அரசும் தங்களோட இரும்பு கரத்தை இறுக்கினா மட்டும் தான் பாலிவுட் உலகிற்கு விடிவு பிறக்கும்.

========================