Population Census First time Through Digital 
இந்தியா

டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு : அசத்தும் இந்தியா

First Digital Census in India : நாட்டிலேயே முதன்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

Kannan

மக்கள்தொகை கணக்கெடுப்பு :

First Digital Census in India : இந்தியாவில் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ல் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து 2021 நடைபெற இருந்தது கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்த மத்திய அரசு அதில் ஒரு பகுதியாக சாதிவாரி கணக்கெடுப்பை சேர்க்க முடிவு செய்துள்ளது.

டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு :

அதன்படி 16 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மார்ச் 1, 2027 ஆம் தேதிக்குள் இந்தியா தனது மக்கள்தொகையை கணக்கிடும். இதன் முதல் கட்டம்தான் டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பாகும்(First Digital Census), மேலும் சுதந்திர இந்தியாவில் சாதிகளின் கணக்கெடுப்பையும் உள்ளடக்கிய முதல் கணக்கெடுப்பு இதுவாகும்.

மக்களவை தொகுதிகள் வரையறை :

மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 28, 2027 க்குள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை(India Population Census), மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான அடிப்படையாகப் பயன்படுத்தலாம்.

செல்போன் மூலம் கணக்கெடுப்பு :

முதல் கட்டத்தில், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே டிஜிட்டல் முறையில் பதிலளிக்கலாம். இரண்டாம் கட்டத்தில், களப்பணியாளர்கள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்படும். ஆங்கிலம், இந்தி, உள்ளூர் மொழிகளில் செல்போன் செயலிகள் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. செயலில் பதிவு செய்யப்படும் விவரங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய சர்வருக்கு அனுப்பபடும். மக்கள்தொகை விவரங்களை பெற முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்யவும் வலைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 16 மொழிகளில் எடுக்கப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு(National Population Record) மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது.

பல்நோக்கு அடையாள அட்டை :

டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு(Digital Census) எடுக்கப்படுவதன் மூலம், பல்நோக்கு அடையாள அட்டையை கொண்டு வர முடியும். தனிநபரின் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படும் ஆவணங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்படும் என்பதால், அதன் மூலம் பல்நோக்கு அடையாள அட்டையை ஏற்படுத்த முடியும்.

அக்டோபர் 1ம் தேதி தொடக்கம் :

மக்கள்தொகை கணக்கெடுப்பு(Population Census) பணிகள் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அக்டோபர் 1ம் தேதி தொடங்கும். பிற பகுதிகளில் அடுத்தாண்டு மார்ச் 1ம் தேதி கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும். அனைத்து மக்களையும் இதன் பயன்கள் குறித்த தகவல்கள் சென்றடைய வேண்டும்.

அப்போதுதான் எதிர்கால திட்டங்கள், முன்னேற்ற நடவடிக்கைகள், அரசின் நலத்திட்டங்கள், நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்தளவு முக்கிய பங்காற்றுகிறது என்பது மக்களுக்கு தெரிய வரும்.

===