இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, எஸ்பிஐ வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
2023ம் ஆண்டு இந்தியாவில் வறுமை விகிதம், 5.3% இருந்ததாக உலக வங்கி மதிப்பீடு செய்து இருந்தது.
இந்த நிலையில் 2024ல் வறுமை விகிதம் 4.6% என கணிசமாக குறைந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மூலம், வறுமையின் பிடியில் இருந்து விடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய வறுமை கோட்டுக்கான வரையறையை உலக வங்கி அண்மையில் மாற்றியமைத்தது.
அதன்படி, நாளொன்றுக்கு 2.15 டாலரிலிருந்து 3 டாலராக வரையறை திருத்தப்பட்டது.
உலகளவில் தீவிரமான வறுமையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை தற்போது, 12.5 கோடியாக குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.