President Droupadi Murmu has approved appointment of Justice Surya Kant as next Chief Justice of India CJI Google
இந்தியா

Supreme Court: தலைமை நீதிபதியாகிறார் சூர்யகாந்த்: ஜனாதிபதி உத்தரவு

Justice Surya Kant Next CJI Of Supreme Court Of India : உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Kannan

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி :

Justice Surya Kant Next CJI Of Supreme Court Of India : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் பி.ஆர். கவாய். இவரது பதவிக்காலம் நவம்பர் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, வழக்கமான நடைமுறையின்படி, தனக்கு அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மிகவும் மூத்த நீதிபதியாக இருக்கும் நீதிபதி சூர்ய காந்தின் பெயரை ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை சட்ட அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.

புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த்

இதையடுத்து, 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்தை நியமிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்தை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் 24ல் பதவியேற்பு

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் 24ம் தேதி நீதிபதி சூர்யகாந்த் பதவி ஏற்கிறார். அவர் வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை பதவியில் இருப்பார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், ”அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள தன்னுடைய அதிகாரங்களின் அடிப்படையில் நீதிபதி சூர்யகாந்தை தலைமை நீதிபதியாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.புதிய தலைமை நீதிபதிக்கு என்னுடைய இதயப்பூர்வ வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹரியானாவை சேர்ந்த சூர்யகாந்த்

ஹரியானா மாநிலம், ஹிசார் நகரில் 1962ம் ஆண்டு பிறந்தார் சூர்யகாந்த், 2004 ஜனவரியில் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2018ம் ஆண்டு அக்டோபரில் இமாச்சல் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2019ம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க : Supreme Court : புதிய தலைமை நீதிபதி சூர்ய காந்த் : கவாய் பரிந்துரை

தற்போது மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யகாந்த் உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்(Justice Surya Kant Next CJI Tenure). நீதிபதி சூர்யகாந்த், ​​நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறைப் பதவியை வகிக்க உள்ள ஹரியானாவை சேர்ந்த முதல் நபர் சூர்யகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

======