நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி முர்மு
President Droupadi Murmu Submarine Sortie in INS Vaghsheer At Karnataka Naval Base : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணம் செய்தார்.
ஐஎன்எஸ் வாக்ஷீர்
கல் வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வாக்ஷீரில்(INS Vaghsheer) இந்தப் பயணத்தை குடியரசுத் தலைவர் மேற்கொண்டார். அவருடன் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் பயணம் செய்தனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்குப் பிறகு நீர்மூழ்கியில் பயணம் செய்த 2-வது குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு(Droupadi Murmu) என்பது குறிப்பிடத்தக்கது.
போர் விமானத்தில் முர்மு
கடந்த அக்டோபர் மாதம், நாட்டின் மேம்படுத்தப்பட்ட பன்முகத் தாக்குதல் திறன் கொண்ட போர் விமானமான ரஃபேலில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பறந்தது குறிப்பிடத்தக்கது.
கலாமிற்கு அடுத்து முர்மு
கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்(APJ Abdul Kalam Submarine) முதல்முறையாக நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்திருந்தார். சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரௌபதி முர்மு, நீர்மூழ்கிக் கப்பல் பயணத்தை மேற்கொண்டார்.
இந்தியாவின் பாதுகாப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் தன்னிறைவு மீதான நம்பிக்கையை உலகுக்கு பறைசாற்றுவதாக குடியரசு தலைவரின் பயணம் அமைந்துள்ளது என்று இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
==============