Priced higher than an iPhone: Make calls even without a network! BSNL's new satellite phone.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், மொபைல் டவர்களே இல்லாத அடர்ந்த காடுகள் மற்றும் மலைப் பிரதேசங்களிலும் தடையின்றிப் பேசக்கூடிய ஒரு புதிய செயற்கைக்கோள் தொலைபேசியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
டெக் உலகை வியப்பில் ஆழ்த்திய BSNL
இதன் விலை ஐபோன் 17-ஐ விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதுதான் தற்போது ஒட்டுமொத்த டெக் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது BSNL நிறுவனம்.
டவர் தேவையில்லை... நேரடியாக சாட்டிலைட் கனெக்ஷன்...
நாம் பயன்படுத்தும் சாதாரண ஸ்மார்ட்போன்கள் மொபைல் டவர் சிக்னல் மூலமாக செயல்படுகின்றன. ஆனால், இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போன், இன்மார்சாட் செயற்கைக்கோள் நெட்வொர்க் உடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் மொபைல் நெட்வொர்க்கே இல்லாத இமயமலைப் பகுதி அல்லது ஆழ்கடலில் இருந்தாலும் உங்களால் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
இந்த சாட்டிலைட் போனின் சிறப்பம்சங்கள்
கடுமையான தட்பவெப்ப நிலை, பனிப்பொழிவு அல்லது இயற்கை பேரிடர் காலங்களைத் தாங்கும் வகையில் மிகவும் உறுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.
மின்சார வசதி இல்லாத தொலைதூர இடங்களிலும் பல நாட்களுக்குத் தாங்கக்கூடிய சிறப்பான பேட்டரி பேக்கப் இதில் உள்ளது.
ஆபத்தான அவசர காலங்களில் மீட்புக் குழுவினருக்கு உடனடியாகத் தங்களின் இருப்பிடத்தை எச்சரிக்கை சமிக்ஞையாக அனுப்பும் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் விலை எவ்வளவு தெரியுமா?
இந்த பிஎஸ்என்எல் சாட்டிலைட் போனின் விலை ரூ. 1,34,166 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யார் இதை வாங்க முடியும்?
விலை அதிகமாக இருந்தாலும், நினைத்த உடனே சாதாரண கடைகளில் இதை வாங்கிவிட முடியாது. இதைப் பயன்படுத்துவதற்கு இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
வாடிக்கையாளர்கள் இந்த போனை எந்த இடத்தில், என்ன காரணத்திற்காகப் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற தெளிவான விவரங்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய அனுமதி இல்லாமல் சாட்டிலைட் போன்களை வைத்திருப்பது அல்லது இயக்குவது சட்டப்படி குற்றமாகும்.
பொதுவாக ராணுவத்தினர், பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆய்வு செய்யும் அதிகாரிகளுக்கு இது பெரும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
=================