மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்
மேற்கு வங்க மாநிலத்தில் 23 மற்றும் 29ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பிரதமர் மோடி பரப்புரை
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.
” பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தோற்கடித்துவிட்டன.
பெண்களுக்கு திரிணாமூல் துரோகம்
பெண்களுக்கு துரோகம் இழைத்த திரிணமூல் கட்சிக்கு வரும் தேர்தலில் பெண்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
பெண்களுக்கு சலுகைகள்
பெண்களின் குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
மாதம் ரூ.3,000 உதவித்தொகை
மேற்கு வங்க பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும். இதன்படி ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 வழங்கப்படும். மத்திய அரசு சார்பில் பெண்களின் குழந்தைப்பேறுக்கு ரூ.21,000 அளிக்கப்படும்.
பெண் குழந்தைகள் கல்வி - ரூ.50,000
பெண் குழந்தைகளின் கல்விக்கு ரூ.50,000 வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைக்கும்போது மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். கடந்த 15 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது.
திரிணாமூல் மீது தாக்கு
ஆனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் மாநிலம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் வியாபித்து பரவி உள்ளது.
சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசே, வங்க மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். பாஜக ஆட்சி அமைத்தால் நேர்மையான முறையில் அரசு பணிக்கு ஆட்தேர்வு செய்யப்படும். எனது அனுபவத்தின் அடிப்படையில் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி” இவ்வாறு பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.
=====