ராகுலை கண்டித்த உச்ச நீதிமன்றம் :
PM Modi on Rahul Gandhi : இந்திய எல்லையில் மிகப்பெரிய ஒரு பகுதியை, சீனா ஆக்கிரமித்து விட்டதாக காங்கிரசைச் சேர்ந்த மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'ஓர் இந்தியர் இப்படி பேச மாட்டார்' எனக் குறிப்பிட்டது. பொறுப்புள்ள எம்பியாக, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஒருவர் இப்படி பேசக் கூடாது என நீதிபதிகள்க கண்டித்தனர்.
என்டிஏ எம்பிக்கள் கூட்டம் :
இந்தநிலையில், என்டிஏ எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
ஆயுதப் படைகளுக்கு பாராட்டு :
'ஆப்பரேஷன் சிந்துார், ஆப்பரேஷன் மஹாதேவ்' நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்திய ஆயுதப் படைகளை பாராட்டி இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்பிக்களிடையே பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியில் எதிர்கால திட்டங்கள் பற்றி விவரித்தார்.
ராகுலை போல பொய் பேசாதீங்க :
இந்தக் கூட்டத்திற்கு பிறகு, பிரதமர் மோடி பேசியது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “: ராகுல் எப்போதும் தவறான தகவல்களையே தெரிவித்து வருகிறார். உச்ச நீதிமன்றம் கூட அதைக் கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இது நமக்கு ஒரு பாடம். ராகுலை போல ஒருபோதும் பொய் பேச வேண்டாம், என்று எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறினார்.
மேலும் படிக்க : Rahul Gandhi : சீன எல்லை விவகாரம் : ராகுலை கண்டித்த உச்சநீதிமன்றம்
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அமளி :
மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஒரு மசோதா கூட நிறைவேற்றப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியே இதற்கு காரணம். ராஜ்ய சபாவில் சபைக் காவலர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜன கார்கே கூறுவது முற்றிலும் தவறானது. நாடாளுமன்ற சுமாகமாக இயங்க, எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக கிரண் ரிஜிஜுl தெரிவித்தார்.
====