Prime Minister Modi, currently on state visit to Uzbekistan,Kyrgyzstan, is meeting with Putin and Jinping AI generated
இந்தியா

"புதின், ஜின்பிங்கை சந்திக்கிறார் மோடி” : 2 நாடுகளுக்கு பயணம் : ஷாங்காய் உச்சி மாநாட்டிலும் பங்கேற்பு...!

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் மோடி, புதின், ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

Kannan

Prime Minister Narendra Modi leaves for Tashkent, Uzbekistan

பிரதமர் உஸ்பெகிஸ்தான் பயணம்

உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்ஜியோயேவ் அழைத்ததன் பேரில், அந்நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சென்றிருக்கிறார் பிரதமர் மோடி.

டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்ற அவர், அதிபர் மிர்ஜியோயேவை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை நடத்துகிறார்.

முக்கிய ஆலோசனை

வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி மற்றும் மக்கள் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.

பிரதமர் தாஷ்கண்டில் உள்ள சாஸ்திரி நினைவிடம், தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள மகாத்மா காந்தி மையம் ஆகியவற்றையும் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு

இதனைத் தொடர்ந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26 ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, கிர்கிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இதில் இந்தியா 2017 முதல் முழு உறுப்பினராக உள்ளது. பிரதமர் இந்த உச்சிமாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

மத்திய ஆசியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் 6-வது உலக பாரம்பரிய நாட்டுப்புற விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

புதின், ஜின்பிங்குடன் சந்திப்பு

உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

=====

Prime Minister Narendra Modi leaves for Tashkent, Uzbekistan