Prime Minister Modi given approval for Chennai–Bengaluru bullet train project source:thamizhalai,ai generated
இந்தியா

”Travel Time 73 நிமிடங்கள்” : சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் : பிரதமர் மோடி ஒப்புதல், நிஜமாகும் தமிழர்களின் கனவு..!

சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் கொடுத்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

Kannan

உலக நாடுகளில் புல்லட் ரயில்கள்

ஜப்பான், சீனா, கொரியா நாடுகளில் தான் புல்லட் ரயில்களை சினிமாக்கள், வீடியோக்களில் பார்த்து இருக்கிறோம். அதுவும் புல்லட் ரயில்களை இயக்குறதுல சீனா தான் டாப். இங்கு மணிக்கு 450 கி.மீ. வேகத்தில ரயில்கள் பறக்கின்றன.

இவங்களை மிஞ்சுற விதமா ஜப்பான், சோதனை ஓட்டம் நடத்திய ஒரு ரயில் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில காற்றை கிழிச்சிக்கிட்டு பறந்து இருக்கு.

இந்தியாவிலும் புல்லட் ரயில்

இந்தநிலையில், தான் இந்தியாவிலும் பொதுமக்கள் விரைவாக பயணிக்க வசதியா புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்தனும் அப்படின்னு முடிவு செஞ்சாரு பிரதமர் மோடி.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து

இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் என்பதால் ரயில் போக்குவரத்துக்கு எப்போதும் டிமாண்ட் அதிகம்தான். தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் ரயில்களில் பயணிக்கிறாங்க. இவங்களுக்காக 13,198 ரயில்கள் இயக்கப்படுது.

போதுமான வேகம் இல்லை

நாடு முழுவதும் 7,325 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வளவு இருந்தும் பிரச்சினை என்னன்னு பார்த்தீங்கன்னா, ரயில்களின் வேகம் போதுமானதாக இல்லை என்பதுதான். இந்தியன் ரயில்வேயில் ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் தான்.

அதிவேக ரயில்கள்

இந்த குறையை போக்க, அதிவேக ரயில்கள், குறித்த நேரத்தில் சென்று சேரும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டாலும், இவற்றின் எண்ணிக்கையும் போதுமானதா இல்லை.

புல்லட் ரயில்கள் தேவை

எனவே, தான் புல்லட் ரயில் என்ற கனவை நிறைவேற்ற பிரதமர் ஆர்வம் காட்ட, மும்பை - அகமதாபாத் இடை​யே நாட்​டின் முதலா​வது புல்​லட் ரயில் திட்​டப் பணிகள் வேக​மாக நடந்து கிட்டே வருது. அடுத்த ஆண்டு ஆகஸ்டில இந்த வழித்தடத்தில புல்லட் ரயிலானது பயணிக்க இருக்கு.

இந்தநிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தென் மாநிலஙளுக்கான நல்ல செய்தியை சொல்லி இருக்காரு.

4,000 கி.மீ. புல்லட் ரயில் சேவை

"4,000 கிலோமீட்டர் தொலைவிற்கு புல்லட் ரயில் சேவைக்கான விரிவான பாதை அமைக்க பிரதமர் மோடி ஏற்கனவே ஒப்புதல் கொடுத்து இருக்காரு. இதன் மூலம், தென்னிந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்கள் வர இருக்கு.

தென்னிந்த நகரங்கள் இணைப்பு

தென்னிந்தியாவின் பொருளாதார மையமாகவும்.. தொழில்நுட்பத்தில் முன்னோடியாகவும் விளங்கும் பெங்களூர், சென்னை, ஹைதராபாத், அமராவதி ஆகிய நகரங்கள் புல்லட் ரயில் மூலமா இணைக்கப்பட இருக்கின்றன.

சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் சேவை

அதிலும் சென்னை-பெங்களூர் புல்லட் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் போது, இந்த நகரங்களுக்கு இடையேயான பயண தூரம் வெறும் 73 நிமிடங்கள், அதாவது ஒரு மணி 13 நிமிஷங்களா இருக்க போகுது.

சென்னை சென்டரலிலிருந்து புறப்படும் புல்லட் ரயில், பூந்தமல்லி, பரந்தூர், சித்தூர், கோலார், கொடிஹல்லி, ஒயிட்ஃபீல்டு வரையா பெங்களூரை சென்று அடையும்.

பயண நேரம் 73 நிமிடங்கள்

இந்த ரயில் 28 கி.மீ தொலைவை பூமிக்கடியில் கடக்கும். இந்த ரயிலோட அதிகபட்சமாக மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரயில் பறக்கும்.

இத​னால் இரு நகரங்​களும் ஒரே நகர​மாக மாறி​ம். எப்படின்னா, இப்போது சென்னை – பெங்​களூரு இடையிலான வந்தே பாரத் ரயி​லின் பயண நேரம் 4 மணி நேரம் 25 நிமிடங்​களாக உள்​ளது. அதனுடன் ஒப்​பிடும்​போது புல்​லட் ரயிலின் பயண நேரம் ரொம்ப குறைவு. அப்படி பார்த்தா கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் நேரத்துல சென்னையில் இருந்து பெங்களூருக்கு போயிடலாம்.

புதிய வழித்தடங்கள் - பிரதமர் ஆர்வம்

இவைபோக மேலும் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் சேவையை கொண்டு வர பிரதமர் மோடி ஆர்வமாக இருக்காராம். அதற்கான அறிவிப்புகளும் வரும் ஆண்டுகளில் வர இருக்கு.

10 ஆண்டுகளில் கனவு நனவாகும்

சென்னையை பொறுத்தவரை இப்போதுதான் புல்லட் ரயிலுக்கான ரூட் கிளியர் அப்ரூவல் கிடைச்சு இருக்கு. இனி, திட்டத்தை செயல்படுத்துவது, நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீடு போன்ற ஏராளமான வேலைகள் இருப்பதால், 10 ஆண்டுகளில் புல்லட் ரயில் கனவு நனவாகும் எனத் தெரிகிறது.

===================