Prime Minister Modi has achieved the distinction of receiving the highest awards from 33 countries so far google
இந்தியா

'Order of the White Double Cross' : பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியா உயரிய விருது : 33 சர்வதேச விருதுகளை பெற்று சாதனை..!

பிரதமர் மோடி இதுவரை 33 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்று சாதித்து இருக்கிறார்.

Kannan

12 ஆண்டுகளாக பிரதமர்

2014ம் ஆண்டு முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, 2019, 2024 தேர்தல்களில் என்டிஏ கூட்டணியை வெற்றி பெறச் செய்து தொடர்ந்து பிரதமர் பதவியில் இருக்கிறார்.

மோடிக்கு உயரிய விருதுகள்

நீண்ட நாட்கள் தொடர்ந்து பிரதமர் என்ற ஜவஹர்லால் நேருவின் சாதனையையும் அவர் முறியடித்து உள்ளார். பல்வேறு நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட போது, பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி

அந்த வகையில், ஸ்லோவாக்கியா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருக்கிறார். 'வந்தே மாதரம்' பாடலை பாடி அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

தலைநகர் பிராட்டிஸ்லாவா (Bratislava) சென்ற பிரதமர் மோடிக்கு, ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் பிரதமர்

1993ம் ஆண்டு ஸ்லோவாக்கியா விடுதலை பெற்ற பிறகு அந்நாட்டிற்கு ன்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

மோடிக்கு ஸ்லோவாக்கியா உயரிய விருது

ஸ்லோவாக்கியா, தனது நாட்டின் மிக உயரிய குடிமை விருதான 'Order of the White Double Cross' விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவித்தது. இந்த விருதை பெறும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தங்கள் கையெழுத்து

இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின் போது, பாதுகாப்புத் துறை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மருந்து உற்பத்தி (Pharmaceuticals) மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

140 கோடி மக்களுக்கு சமர்ப்பணம்

தனக்கு வழங்கப்பட்ட விருதை 140 கோடி மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி இதுவரை 33 சர்வதேச நாடுகளின் உயரிய விருதுகளை பெற்று இருக்கிறார் அவற்றின் விபரம் வருமாறு :

(2016)

* ஸ்டேட் ஆர்டர் ஆப் காஸி அமீர் அமானுல்லா கான் - ஆப்கானிஸ்தான்

* தி கிங் அப்துல் அஸீஸ் சாஷ் - சவுதி அரேபியா

( 2018)

* கிராண்ட் காலர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீன் விருது - பாலஸ்தீனம்

(2019)

* கிங் ஹமத் ஆர்டர் ஆப் தி ரெனைசான்ஸ்- பஹ்ரைன்

* ஆர்டர் ஆப் சையத் விருது - ஐக்கிய அரபு அமீரகம்

* ஆர்டர் ஆப் தி டிஸ்டிங்குவிஷ்டு ரூல் ஆப் நிஷான் இசுதீன் - மாலத்தீவு

(2020)

* அமெரிக்க அரசாங்கத்தின் லீஜியன் ஆப் மெரிட் - அமெரிக்கா

(2023)

* கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் ஹானர் - கிரீஸ்

* கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்- பிரான்ஸ்

* ஆர்டர் ஆப் தி நைல் - எகிப்து

* கிராண்ட் கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோஹூ கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி - பிஜி

* எபாக்ல் விருது - பலாவு

(2024)

* ஹானரரி ஆர்டர் ஆப் ப்ரீடம் ஆப் பார்படாஸ் விருது- பார்படாஸ்

* தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் - குவைத்

* தி ஆர்டர் ஆப் எக்ஸலன்ஸ் - கயானா

* தி டொமினிகா அவார்ட் ஆப் ஹானர் - டொமினிகா

* தி கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர்- நைஜீரியா

* ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல் - ரஷ்யா

* ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ- பூடான்

(2025)

* ஆர்டர் ஆப் ஓமன்- ஓமன்

* கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா - எத்தியோப்பியா

* தி ஆர்டர் ஆப் தி மோஸ்ட் ஏசியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ்- நமீபியா

* கிராண்ட் காலர் ஆப் தி நேஷனல் ஆர்டர் ஆப் தி சதர்ன் கிராஸ்- பிரேசில்

* தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப்- டிரினிடாட் & டொபாகோ

* தி ஆபிஸர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா- கானா

* சைப்ரஸின் 'கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மகாரியோஸ் III மித்ர விபூஷண விருது - இலங்கை

* கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி இந்தியன் ஓஷன் - மொரிஷியஸ்

(2026)

* ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்- ஸ்வீடன்

* ஸ்பீக்கர் ஆப் தி நீசெட் மெடல்- இஸ்ரேல்

* கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆப் மெரிட் -நார்வே

* ஆர்டர் ஆஃப் தி வொய்ட் டபுள் கிராஸ் - ஸ்லோவாக்கியா

----