பிரதமர் மூன்று நாடுகளுக்கு பயணம்
Prime Minister Narendra Modi on Tuesday was conferred with Ethiopia's highest award, 'The Great Honour Nishan of Ethiopia', by his Ethiopian counterpart Abiy Ahmed Ali : மூன்று நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து எத்தியோப்பியா
சிவப்பு கம்பள வரவேற்பு
தலைநகர் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்று அழைத்து சென்றார்.
எத்தியோப்பியா பிரதமருடன் ஆலோசனை
பின்னர் பிரதமர் மோடியும், எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலியும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது
பின்னர், பிரதமர் மோடிக்கு எதியோப்பியான் தி கிரேட் ஹானர் ( 'The Great Honour Nishan of Ethiopia' ) என்ற உயரிய விருதினை வழங்கி அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி கௌரவித்தார். இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. எத்தியோ
மிகப்பெரிய கௌரவம் - மோடி நெகிழ்ச்சி
விருதினை பெற்றுக் கொண்ட பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, ”நாட்டின் மிக உயரிய விருதான - எத்தியோப்பியாவின் தி கிரேட் ஹானர் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான நாகரிகத்தால் கவுரவிக்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்திய மக்களின் சார்பாக நன்றி
"I'm honoured to be conferred with the 'Great Honour Nishan of Ethiopia.' I dedicate it to the 140 crore people of India," : இது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். உங்கள் அனைவருடனும், இந்த மாபெரும் எத்தியோப்பியா நாட்டில் இருப்பது எனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம்.
எத்தியோப்பிய மக்களின் அன்புக்கு நன்றி
நான் எத்தியோப்பியாவுக்கு வந்தவுடன், இங்குள்ள மக்கள் எனக்கு அன்பையும், பாசத்தையும் வழங்கினர். பிரதமர் என்னை விமான நிலையத்தில் வரவேற்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சி” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்தியா - எத்தியோப்பியா உறவை வலுப்படுத்த எடுத்த முயற்சிகளுக்காக பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு இந்த உயரிய விருதினை வழங்கி கௌரவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
==========