Prime Minister Modi achieves record of 30 million subscribers on YouTube source:google
இந்தியா

இன்ஸ்டாவில் 100 மில்லியன்..யூ-ட்யூபில் 30 மில்லியன்.. : உலகத் தலைவர்களில் முதலிடத்தில் மோடி!

Prime Minister Modi achieves record of 30 million subscribers on YouTube : ராகுல் காந்தியை விட மூன்று மடங்கு அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களைப் பெற்றுள்ளார் பிரதமர் மோடி.

S Kavitha

Prime Minister Modi achieves record of 30 million subscribers on YouTube:

பிரதமர் மோடி சாதனை

பிரதமர் மோடி, யூ-ட்யூபில் 30 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்று சாதனை படைத்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன்

2014 ஆம் ஆண்டு தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். ஆனால் 100 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட அரசியல் தலைவர் என்ற புகழைப் பெற்றார்.

யூ-ட்யூபில் 30 மில்லியன்

இதையடுத்து இப்போது இன்ஸ்டாவைப்போல் யூ-ட்யூபில் 30 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் பெற்று சர்வதேச தலைவர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி 2007 ஆம் ஆண்டு தான் யூ-டியூப்-இல் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார்.

இதுவரையில் 33,823 வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் 8,054,635,280 பார்வைகளை கடந்து இன்னும் பார்வைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ராகுலை விட 3 மடங்கு அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்

சரி, மற்ற தலைவர்களை யூ-ட்யூபில் எத்தனை பேர் பின்தொடர்கிறார்கள் என்று பார்த்தால், இந்திய அரசியல் தலைவர்களில் ராகுல் காந்தியை விட மூன்று மடங்கு அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களைப் பெற்றுள்ளார் பிரதமர் மோடி.

உலகத் தலைவர்களை பின்னுக்குத் தள்ளிய மோடி

அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை காட்டிலும், 7 மடங்கு அதிக சப்ஸ்க்ரைபர்கள் பெற்றுள்ளார்.

தரவரிசையின் படி ஏற்கெனவே இரண்டாம் இடத்தில் உள்ள முன்னாள் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை விட நான்கு மடங்கு அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களைப் பெற்றுள்ளார் பிரதமர் மோடி.

இந்த சாதனையின் மூலமாக உலக நாடுகளின் அரசியல் தலைவர்களில் அதிகம் பேர் பின் தொடரும் பெருமைக்குரியவராக திகழ்கிறார் பிரதமர் மோடி.

எந்தவொரு அரசியல் தலைவரும் எட்டாத சாதனையாகவே பிரதமர் மோடியின் இந்த சாதனை பார்க்கப்படுகிறது.