Prime Minister Narendra Modi expressed pride, Union Budget 2026 presented keeping in mind the development of 140 crore Indians Google
இந்தியா

140 கோடி இந்தியர்கள், பெண்களின் வளர்ச்சி : பிரதமர் மோடி பாராட்டு

PM Modi Praised Central Budget 2026-27 : 140 கோடி இந்தியர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்து இருக்கிறார்.

Kannan

மத்திய பட்ஜெட் தாக்கல் :

PM Modi Praised Central Budget 2026-27 : 2026-27ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் சாதனை படைத்து இருக்கிறார்.

வளர்ச்சிக்கான பட்ஜெட்

இந்தநிலையில், மத்திய பட்ஜெட் குறித்து தனது கருத்தினை பதிவிட்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, “ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட் வளர்ச்சிக்கானது எனத் தெரிவித்துள்ளார்.

2047 - இலக்கை நோக்கிய பட்ஜெட்

2047இல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் உள்ளது. வித்துள்ளார். ஒன்றிய பட்ஜெட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம். வளர்ச்சி நிறைந்த இந்தியாவுக்கான பயணத்தில் இந்த பட்ஜெட் வலுசேர்க்கும்.

தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்

தொலைநோக்குடன் வளர்ச்சிக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். நாட்டு மக்களின் தொழில் திறனை வளர்ப்பதற்கு நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்துள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள்

உலகத்தின் டேட்டா சென்டர் மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் பல முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் உள்ளன.

தொழில்துறை முன்னேற்றம்

நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது.

140 கோடி இந்தியர்களுக்கு பயன்

140 கோடி இந்தியர்களுக்கு பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. வளர்ச்சி நிறைந்த இந்தியா என்ற பயணத்திற்கு இது வலுச்சேர்க்கும்.

மருத்துவத்திற்கு முக்கியத்துவம்

மருத்துவம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியதுவம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இளைஞர்களுக்கு முன்னுரிமை

பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாற இருக்கிறது.

வளர்ச்சி வேகமெடுக்கும்

பட்ஜெட் அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும். மக்களின் தொழில் திறனை வளர்ப்பதற்கு பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்து இருக்கிறார்.

பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்

நிதி பற்றாக்குறையை குறைக்கவும், பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும் பட்ஜெட்டில் முன்னுரிமை. இந்தியாவின் பொன்னான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை மத்திய பட்ஜெட் வலுப்படுத்தி இருக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

===================