Prime Minister Narendra Modi has said that war cannot solve any problem and only dialogue can pave the way for peace google
இந்தியா

"போர் தீர்வாக இருக்காது, பேச்சுவார்த்தை மட்டுமே வழி!" : இந்தியாவின் நிலைப்பாடு : தெளிவுபடுத்திய பிரதமர் மோடி

போரினால் எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாது என்றும், பேச்சுவார்த்தை மட்டுமே அமைதிக்கு வழி வகுக்கும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

Kannan

டெல்லியில் பின்லாந்து பிரதமர்

'Military Conflict Alone Cannot Resolve Any Issue, PM Modi On Iran-Israel-US And Ukraine Wars : ஐரோப்பிய நாடான பின்லாந்து நாட்டின் பிரதமர் அலேக்சாண்டர் ஸ்டப் ( Alexander Stubb ) நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

நல்லுறவை வலுப்படுத்துவது பற்றி இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சந்திப்பின் போது இந்தியா - பின்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதைத்தொடர்ந்து இரண்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நடந்து வரும் சூழலில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்.

எந்த பிரச்னைக்கும் போர் என்பது தீர்வாக இருக்க முடியாது. ஈரான் மோதல் போக்கை நிறுத்த வேண்டும். ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும். அது உக்ரைன் ஆக இருந்தாலும், வேறு எந்த நாடாக இருந்தாலும், மேற்கு ஆசியாக இருந்தாலும், போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவும், பின்லாந்தும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியவை பாராட்டிய பின்லாந்து பிரதமர் அலேக்சாண்டர் ஸ்டப், வெளியுறவு கொள்கையில் இந்தியா யதார்த்தமான கண்ணோட்டத்துடன் செயல்படுவதாக குறிப்பிட்டார்.

=============