PM Modi Rank in Most Trusted Leader in World 2025 
இந்தியா

உலகின் அதி நம்பிக்கையான தலைவர் : 75 புள்ளிகளுடன் முதலிடத்தில் மோடி

PM Modi Rank in Most Trusted Leader in World 2025 : உலகில் அதிக நம்பிக்கை வாய்ந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்து இருக்கிறார்.

Kannan

உலகத் தலைவர்களில் சிறந்தவர் மோடி :

PM Modi Rank in Most Trusted Leader in World 2025 : 11 ஆண்டுகளாக இந்தியாவை வழி நடத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, உலகளவில் போற்றுதலுக்கு உரிய தலைவராக உள்ளார். நாடுகளை வாட்டுவதில் டொனால்டு ட்ரம்ப், போர்களில் கவனம் செலுத்தும் விளாடிமீர் புதின், நம்பகத்தன்மையற்ற ஜீ ஜிங்பிங் என வல்லரசு நாடுகளின் தலைவர்கள் செயல்பட, இந்தியாவின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, உலக நாடுகளுடன் நட்பை வளர்த்து வருகிறார் நரேந்திர மோடி.

உலகளவில் ஆய்வு :

இந்தநிலையில், The Morning Consult Global Leader Approval Tracker என்ற அமைப்பு, உலகில் அதிக நம்பிக்கை மிக்க தலைவர் குறித்து ஒரு ஆய்வினை நடத்தியது. நடத்திய ஒரு ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாஜகவின் அமித் மால்வியா தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, உலகின் அதி நம்பிக்கையான தலைவராக பிரதமர் மோடி(Narendra Modi Most Trusted Leader 2025) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகளவில் மோடிக்கு பெருமதிப்பு :

இவருக்கு உலக அளவில் பெரும் மதிப்பு இருப்பதாகவும், இவரை இந்திய மக்கள் பலர் நம்பிக்கைக்கு உரியவராக கருதுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதல் நபராகவும், இரண்டாவதாக தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்க் ( 59 சதவீதம் ). 3வதாக அர்ஜென்டினா அதிபர் ஜாவீஸ் மில்லி ( 57 சதவீதம் ) உள்ளனர்.

பாதுகாப்பானவர் கையில் இந்தியா :

100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களால் நேசிக்கப்படுபவர் மற்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களால் மதிக்கப்படுபவர், பிரதமர் நரேந்திர மோடி. உலக அளவில் வலுவான தலைவர், மதிப்பான தலைவர் மோடியின் கையில் நாடு பாதுகாப்பாக உள்ளது என்பதையே இது உணர்த்துகிறது என அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.

ட்ரம்பிற்கு 44 சதவீத ஆதரவு :

4வது இடத்தில் 56 சதவீத ஆதரவுடன் கனடா பிரதமர் மார்க் கார்ஜே உள்ளார். , 5வதாக 54 சதவீத ஆதரவுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அண்டனி அல்பானீஸ் இருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் 44 சதவீத ஆதரவுடன் 8வது இடத்தையும், 9வதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (41 சதவீதம்), 10வதாக இத்தாலி ஜார்ஜியா மெலோனி (41 சதவீதம்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

===========