Prime Minister Narendra Modi launches HPV vaccination campaign for all girls under 14 years of age.  google
இந்தியா

நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு HPVஇலவச தடுப்பூசி திட்டம் : தொடங்கி வைத்தார் மோடி!

PM Narendra Modi launches HPV Vaccine : நாடு முழுவதும் 14 வயதான சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.

Rohini

தடுப்பூசி செலுத்தும் திட்டம்

PM Narendra Modi launches Free HPV Vaccine in India : பெண்களுக்கு கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயயை தடுக்க நாடு முழுவதும் 14 வயதிற்குட்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் தடுப்பூசி போடும் திட்டடத்தை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.

அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்

பெண்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் திகழ்கிறது. ஆண்டுதோறும் புதிதாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு இந்த புற்றுநோய் ஏற்படுவதுடன், சுமார் 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. இதனை தடுப்பதற்க்காகவே இந்த திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எங்கு இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் ?

இந்தத் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசியானது செலுத்த பட இருக்கிறது .

இந்த தடுப்பூசிகளை ஆயுஷ்மான் மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் பயன்

இந்த தடுப்பூசியை செலுத்தி கொல்வதன் மூலம் இதன் பலன்கள் 15-20 ஆண்டுகளில் தெரியவரும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது மிகவும் பாதுகாப்பான தடுப்பூசி என்றும் குறிப்பிட்டுள்ளார்.