Prime Minister Narendra Modi listed the changes and achievements in India in 2025 on social media https://x.com/narendramodi/
இந்தியா

2025ல் இந்தியாவின் சாதனைகள் : பட்டியலிட்டு பிரதமர் மோடி பெருமிதம்

2025-ல் இந்தியாவில் நடைபெற்ற மாற்றங்கள் மற்றும் சாதனைகளை பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பட்டியலிட்டு உள்ளார்.

Kannan

விடைபெறும் 2025

ndia has boarded the Reform Express! 2025 witnessed pathbreaking reforms across various sectors which have added momentum to our growth journey. They will also enhance our efforts to build a Viksit Bharat : 2025ம் ஆண்டு நிறைவு பெற்று 2026ம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இதையொட்டி, சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்திர மோடி விரி​வான பதிவு வெளி​யிட்​டுள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது,

11 ஆண்டுகளில் சீர்திருத்தங்கள்

“ நாட்​டின் வளர்ச்​சிக்​காக கடந்த 11 ஆண்​டு​களாக பல்​வேறு சீர்​திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. நடப்பு 2025ம் ஆண்​டில் மிகப்​பெரிய சீர்திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்​டன. எனவே,2025 இந்​தி​யா​வின் ஆண்டாக நினை​வு​ கூரப்​படும்.

ஜிஎஸ்டி - மிகப்பெரிய மாற்றங்கள்

2025ம் ஆண்​டில் ஜிஎஸ்டி வரி விகிதத்​தில் மிகப்​பெரிய மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. 5% மற்​றும் 18% என்ற இரு விகிதங்​கள் மட்​டும் அமல் செய்​யப்​பட்டு உள்​ளன. இதனால் அனைத்து வீடு​களி​லும் பட்​ஜெட் சுமை குறைந்​திருக்​கிறது.

விவசாயிகளுக்கு பயன்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​கள், விவ​சா​யிகள் நிறை​வான பலன்​களை அடைந்து வரு​கின்​றனர். பண்​டிகை காலங்​களில் அனைத்து பொருட்​களின் விற்​பனை​யும் கணிச​மாக அதி​கரித்​தது.

வருமான வரி விலக்கு ரூ.12 லட்சம்

2025ம் ஆண்​டில் தனி​நபர் வரு​மான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்​ச​மாக அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. வரு​மான வரிச் சட்​டம் 1961-க்கு பதிலாக வரு​மான வரிச் சட்​டம் 2025 நிறைவேற்​றப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் வரி நடை​முறை​யில் வெளிப்​படைத்​தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது.

காப்பீட்டு துறை - 100% அந்நிய முதலீடு

ரூ.100 கோடி வரை வரு​மானம் ஈட்​டும் நிறு​வனங்​கள், சிறு நிறு​வனங்​களாக வரையறுக்​கப்​பட்டு இருக்​கிறது. இந்​திய காப்​பீட்​டுத் துறை​யில் 100 சதவீத அந்​நிய முதலீட்​டுக்கு அனு​மதி வழங்​கப்​பட்டு உள்​ளது.

பழைய சட்டங்கள் நீக்கம்

கடல்​சார் வணி​கம் தொடர்​பாக நாடாளு​மன்​றத்​தில் 5 முக்​கிய மசோ​தாக்​கள் நிறைவேற்​றப்​பட்டு உள்​ளன. இதன்​மூலம் கடல்​சார் வணி​கம் கணிச​மாக அதி​கரிக்​கும். காலத்​துக்கு பொருந்​தாத 71 பழைய சட்​டங்​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன.

எளிமையான வணிகம் - உற்பத்தி அதிகரிப்பு

நாடு முழு​வதும் எளி​தாக வணி​கம் செய்​வதற்​கான சூழல் உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது. இதன் காரண​மாக மின்​னணு, ஆட்டோ மொபைல் உட்பட பல்​வேறு துறை​களில் உள்​நாட்டு உற்​பத்தி அதி​கரித்​து, ஏற்​றும​தி​யும் கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது.

புதிய தொழிலாளர் சட்டங்கள்

29 பழைய தொழிலா​ளர் சட்​டங்​கள் ஒன்​றிணைக்​கப்​பட்​டு, புதி​தாக 4 தொழிலா​ளர் சட்​டங்​கள் அமல் செய்​யப்​பட்டு உள்​ளன. இதன்​மூலம் பெண்​கள், அமைப்பு சாரா தொழிலா​ளர்​களின் நலன்​கள் பாது​காக்​கப்​பட்டு உள்​ளன. இதன்மூலம் தொழில்துறை வளர்ச்​சி உறுதி செய்​யப்​பட்​டிருக்​கிறது.

புதிய அணுசக்தி சட்டம்

இந்​திய அணு சக்தி துறை​யில் தனி​யார் நிறு​வனங்​கள் பங்​கேற்க வகை செய்​யும் புதிய அணுசக்தி சட்​டம் நிறைவேற்​றப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் இந்​திய அணு சக்தி துறை அபார வளர்ச்சி அடை​யும். ஹைட்​ரஜன் எரிசக்தி உற்​பத்​திக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

ஊரக வேலைவாய்ப்பு - 125 நாட்கள்

புதிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதி சட்​டம் (ஜி ராம் ஜி) நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் ஊரக பகுதி மக்​களுக்​கான வேலை​வாய்ப்பு 100 நாட்​களில் இருந்து 125 நாட்​களாக அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது.

இந்திய உயர்கல்வி ஆணையம்

யுஜிசி, ஏஐசிடிஇ, என்​சிடிஇ உள்​ளிட்ட உயர் கல்வி அமைப்​பு​களை ஒன்​றிணைத்து இந்​திய உயர் கல்வி ஆணை​யம் அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் கல்​வித் துறை​யில் பல்​வேறு மாற்​றங்​கள் ஏற்​படும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்

மத்​திய அரசின் சீர்​திருத்​தங்​களால் சிறு வணி​கர்​கள், இளம் தொழில்​நுட்ப நிபுணர்​கள், விவ​சா​யிகள், தொழிலா​ளர்​கள், நடுத்தர வர்க்க மக்​கள் என அனைத்து தரப்​பினரும் பலன் அடைந்து வரு​கின்​றனர்” இவ்​வாறு அந்தப் பதிவில் பிரதமர்​ நரேந்​திர மோடி பெருமிதம் தெரி​வித்​துள்​ளார்​.

==============