கிறிஸ்துமஸ் பெருவிழா 2025 :
PM Narendra Modi Christmas Celebrations 2025 at Cathedral Church in Delhi : இயேசுபிரான் அவதரித்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கிறிஸ்தவ பெருமக்கள் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். இதையொட்டி, தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரார்த்தனையில் நரேந்திர மோடி
டெல்லியின்ல் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றார். அவர் நடைபெற்ற பிரார்த்தனையிலும் அவர் பங்கேற்றார். கதீட்ரல் தேவாலயம் பழமையான தேவாலயங்களில் ஒன்று. இது டெல்லியில் உள்ள கோல் டக் கானா அருகே அமைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றேன்
தேவாலயத்தின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "டெல்லியில் உள்ள கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் கிறிஸ்துமஸ் காலை பிரார்த்தனையில் கலந்து கொண்டேன்.
அன்பு, அமைதி இரக்கம்
இந்த பிரார்த்தனை அன்பு, அமைதி மற்றும் இரக்கத்தின் நித்திய செய்தியை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்(PM Narendra Modi Christmas Message in Tamil). கிறிஸ்துமஸின் உணர்வு நமது சமூகத்திற்கு நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன்" என்றும் அந்தப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கதீட்ரல் தேவாலயம் - கட்டிடக்கலை
டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயம் அதன் அழகிய கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துமஸுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. டெல்லி முழுவதில் இருந்து மக்கள் இந்த தேவாலயத்திற்கு வந்து இயேசு கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்து கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முன்பும் இங்கு வருகை தந்து, பிரார்த்தனையில் ஈடுபட்டு இருக்கிறார்.
=============