வீரமங்கை வேலுநாச்சியார்
PM Narendra Praised Velu Nachiyar Birthday in Tamil : வீரமங்கை வேலுநாச்சியாரின் 296வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி முத்தாத்தாள் நாச்சியார் தம்பதியரின் மகளாக 1730ஆம் ஆண்டு பிறந்த வீரமங்கை இராணி வேலுநாச்சியார். சிறுவயதிலே வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் போன்ற பல்வேறு போர்க்கலைகளைக் கற்றுத் தேர்ந்தார்.
சிவகங்கை ராணியாக வேலுநாச்சியார்
1746ம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து, சிவகங்கை சமஸ்தானத்தின் இராணியானார்(Velu Nachiyar History in Tamil). 1772ஆம் ஆண்டு ஆங்கிலேயர் சிவகங்கையின் மீது போர் தொடுத்த போது, மன்னர் முத்துவடுகநாதர் கடுமையாகப் போர் புரிந்தபோதும் சூழ்ச்சி காரணமாக வீர மரணமடைந்தார்.
சிவங்கையை மீட்ட வேலுநாச்சியார்
பின்னர், வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்கள், மைசூர் மன்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் அக்காலத்தில் திண்டுக்கல் பகுதியை ஆண்ட கோபால் நாயக்கர் ஆகியோர் உதவியுடன் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வென்று சிவகங்கை சீமையை 1780ம் ஆண்டு மீட்டார்.
ஆங்கிலேயரை எதிர்த்த பெண் போராளி
அதன்பின், 16 ஆண்டுகள் சிவகங்கைச் சீமையைச் சிறப்பாக 2 ஆட்சி செய்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்த “முதல் இந்திய விடுதலைப் பெண் போராளி” வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் 25.12.1976 அன்று(Velu Nachiyar Death Date) மறைந்து அழியாப் புகழ் பெற்றார்.
திருவுருவச் சிலை
தமிழ் மண்ணின் தலைசிறந்த வீராங்கனை இராணி வேலுநாச்சியாரை போற்றிடும் வகையில், சென்னை. கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி புகழாரம்
இந்தநிலையில், வீரமங்கை வேலுநாச்சியாரின் 296வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்.
======================
இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்” இவ்வாறு அந்தப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.