Prime Minister Narendra Modi said, India is moving rapidly on development path  
இந்தியா

"வளர்ச்சி பாதையில் இந்தியா" முன்னேற்றம் : பிரதமர் மோடி பெருமிதம்

வளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.

Kannan

வந்தே பாரத் சேவைகள்

Prime Minister Narendra Modi flagged off four new Vande Bharat Express trains from Varanasi, connecting major parts of the country : உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எர்ணாகுளம் - பெங்களூரு, பிரோஸ்பூர் - டில்லி, லக்னோ - ஷஹாரான்பூர், பனாரஸ் - கஜூராஹோ நகரங்களுக்கு இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இந்தியாவின் வளர்ச்சியில் போக்குவரத்து

நிகழ்ச்சியில் பேசிய அவர், ''இந்தியா வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. நமது பயணிகளிடம் வந்தே பாரத் ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு நகரத்தின் வளர்ச்சி என்பது சிறந்த போக்குவரத்து தொடர்பு கிடைப்பதில் தொடங்குகிறது.

உள்கட்டமைப்பு என்பது பெரிய பாலங்கள் நெடுஞ்சாலைகளுடன் நின்று விடுவதில்லை. புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடர்புகளை மேம்படுத்தி மக்களுக்கு கூடுதல் வசதியை தரும். பெரும்பாலான நாடுகளின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது.

உள்கட்டமைப்பு - வேகமான வளர்ச்சி

இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அமிர்த பாரத் போன்ற ரயில்கள் புதிய தலைமுறை இந்திய ரயில்வேக்கு அடித்தளம் அமைத்துள்ளன.11 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் புனித யாத்திரை தலங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி இருக்கின்றன.

மக்களின் வசதியே குறிக்கோள்

வாரணாசிக்கு உள்ளிட்ட புனித தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் உத்தர பிரதேச பொருளாதாரத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை பங்களித்துள்ளனர்.வாரணாசிக்கு செல்வதையும், அங்கு தங்குவதையும் அனைவருக்கும் ஒரு சிறப்பு அனுபவமாக மாற்றுவதே எங்கள் முயற்சி. புதிய ரயில் சேவைகள் சுற்றுலா துறையில் வளர்ச்சியை உருவாக்கும். உள்ளூர் பொருளாதாரங்களை ஊக்குவிக்கும்.

அயோத்தி - 11 கோடி பேர் வருகை

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு கடந்த ஆண்டு மட்டும் 11 கோடி பேர் இங்கு வந்து சென்றிருக்கிறார்கள். இதன்மூலம் உள்ளூர் மக்களின் வருவாய் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. இந்தியாவின் முழு வளர்ச்சி என்பது, தன்னிறைவு பெறுவது மட்டுமே. அதை நோக்கியே மத்திய அரசு திட்டங்களை வகுத்து பயணித்து வருகிறது” இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.