Prime Minister Narendra Modi wishes on Pongal festival, calling it noble symbol of Tamil tradition Google
தமிழர் திருநாளாம் ’பொங்கல்’
PM Modi Wishes Pongal Festival 2026 : உலக உயிர்களை காத்து, மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் விளைவிக்க காரணமாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடப்படும் விழா தான் பொங்கல் பண்டிகை. தைத் திங்கள் முதல் நாள் வரும் இந்த விழா, தமிழகத்தில் பொங்கல் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
மகர சங்கராந்தி
Prime Minister Modi Pongal wishes :அதன்படி, தை முதல் நாளான நாளை பொங்கல் விழாவை கொண்டாட இந்தியா காத்திருக்கிறது. இந்தநிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பொங்கல், மகர சங்கராந்தி(Makar Sankranti 2026 Wishes in Tamil) வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து
அதன்படி, தமிழக மக்களுக்கு தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனித உழைப்பு, இயற்கையின் இசைவு
மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை ஆகியவற்றுடன் இந்தப் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது.
குடும்பத்தினர் கொண்டாடும் விழா
குடும்பத்தினர் ஒன்றிணைந்து, பாரம்பரிய உணவுகளை சமைத்து, மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம், தலைமுறைகளைக் கடந்து, உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது.
நன்றி தெரிவிக்கும் திருநாளாம் பொங்கல்
தங்களது கடின உழைப்பின் மூலம் நமது வாழ்க்கையை செம்மைப்படுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது.
தமிழின் தாயகமாக இந்தியா
உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். பொங்கல் பண்டிகை, சர்வதேசத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் இந்தப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
தமிழக மக்களுக்கு வாழ்த்து
மீண்டும் உங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தைத்திருநாள், அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும்.’ இவ்வாறு அந்தப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து கொண்டுள்ளார்.
====
தமிழர் திருநாளாம் ’பொங்கல்’
உலக உயிர்களை காத்து, மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் விளைவிக்க காரணமாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடப்படும் விழா தான் பொங்கல் பண்டிகை. தைத் திங்கள் முதல் நாள் வரும் இந்த விழா, தமிழகத்தில் பொங்கல் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
மகர சங்கராந்தி
Prime Minister Modi pongal wishes :அதன்படி, தை முதல் நாளான நாளை பொங்கல் விழாவை கொண்டாட இந்தியா காத்திருக்கிறது. இந்தநிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பொங்கல், மகர சங்கராந்தி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.