Prime Minister's Economic Advisory Council has recommended a review of the women's entitlement allowance scheme Ai generated
இந்தியா

மகளிர் உரிமைத்தொகை : 15 மாநிலங்கள், 12 கோடி பெண்கள் : மறுஆய்வு செய்ய பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை...!

15 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மறுஆய்வு அவசியம், என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

Kannan

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை

Prime Minister's Economic Advisory Council has recommended a review of the women's entitlement allowance scheme, which is being successfully implemented in 15 states :

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் மகளிரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

மாதம் ரூ.2,500 - தவெக வாக்குறுதி

தவெக அரசு மாதம் 2,500 ரூபாய் வழங்குவதாக, வாக்குறுதி அளித்து இருக்கிறது. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

15 மாநிலங்களில் மகளிர் உரிமைத்தொகை

தமிழகத்தில் வெற்றி பெற்ற இந்தத் திட்டத்தை பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றன. 2026 நிதியாண்டில் 15 மாநிலங்களில் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும் மாதாந்திர திட்டம் அமலில் உள்ளது.

12 கோடி பெண்கள் பயன் பெறுகின்றனர்

இதன்மூலம் சுமார் 12 கோடி பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதற்காக மாநிலங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1.7 லட்சம் கோடி செல்வாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு ஆய்வு நடத்தியது.

சமூகத்தில் பெரிய மாற்றம்

மகளிர் உரிமைத்தொகை மூலம் சமூகத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் ஏற்பட்டு இருப்பதும், செலவுகள் குறைந்து, பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் நல்ல வளர்ச்சி இருப்பதால் இந்த திட்டத்தில் மாற்றம் அவசியம் என்று ஆலோசனைக்குழு கருத்து தெரிவித்துள்ளது.

மாத உதவித்தொகை அதிகரிக்க வேண்டும்

இந்த கால கட்டத்திற்கு ஏற்ப நிதி ஆதாரத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு அறிக்கையாக தெரிவித்துள்ளது.

* மகளிர் உரிமைத்தொகையால் வளர்ச்சிப் பொருளாதாரம் மற்றும் அரசியல் பொருளாதாரம் சார்ந்த சான்றுகளின் ஒருங்கிணைப்பு

* பெண்களின் கைகளில் நேரடியாக வழங்கப்படும் வருவாய், குடும்ப நலனை மேம்படுத்தி, நிதிச் சேவைகளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கிறது

* பாலின அடிப்படையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குகிறது.

* பெண்களுக்கான நிபந்தனையற்ற பணப் பரிமாற்ற திட்டங்கள், பணவீக்கம் மற்றும் மாறிவரும் குடும்பச் செலவினப் போக்குகளுக்கு ஏற்ப, மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.

* மகாராஷ்டிரா, ஒடிசாவில் பயனாளிகளின் சேமிப்பு மற்றும் நுகர்வில் சீரான முன்னேற்றம்.

* பணவீக்கம் மற்றும் மாறிவரும் குடும்பச் செலவினப் போக்குகளுக்கு ஏற்ப, பணப்பரிமாற்ற தொகையை மறுஆய்வு செய்ய வேண்டும்.

* மகாராஷ்டிரா, ஒடிசாவில் பெண் பயனாளிகளின் சேமிப்பு மற்றும் நுகர்வு அதிகரித்துள்ளது.

* மாத இறுதியில் இருப்புத் தொகை மகாராஷ்டிராவில் சுமார் 84 சதவீதமும், ஒடிசாவில் 45 சதவீதமாக அதிகரிப்பு

* மாதாந்திர நுகர்வுச் செலவுகள் 46 சதவீதம் வரை அதிகரிப்பு

* இந்தத் திட்டம் குடும்ப உறுப்பினர்களின் நிதி நிலையை மேம்படுத்தி, அவர்களின் செலவுகளை குறைக்கிறது.

* யுபிஐ, ஏடிஎம் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.

* பெண் பயனாளிகளின் வாழ்க்கை முறை சார்ந்த தேவைகள், மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவுகள் ஆகியவற்றில் ஒரு தரமான மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

===============