public can travel without difficulty as additional coaches are being attached to trains operating to Rameswaram for the festive season.
ஆன்மிக தலமான ராமேஸ்வரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலமாக இருப்பதால், நாடு முழுவதும் இருந்து பொதுமக்களும், பக்தர்களும் வந்த வண்ணம் இருப்பர்.
நாடு முழுவதும் இருந்து ரயில்கள்
எப்போதுமே இங்கு கூட்டம் களை கட்டும். இவர்களின் வசதிக்காக
ராமேஸ்வரம் வரும் பயணிகளுக்காக நாடு முழுவதிலும் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன
ராமேஸ்வரம் - திருப்பதி ரயில்
இதில் ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களிலும், திருப்பதியில் இருந்து திங்கள், புதன், வியாழன் ஆகிய நாட்களில் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில்
இதுபோல், ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில், கன்னியாகுமரியில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
நவராத்திரி பண்டிகை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க 3 ஏசி வகுப்பு, 8 படுக்கை வசதி கொண்ட பெட்டி, 4 பொதுப்பெட்டிகள் இந்த ரயில்களில் கூடுதலாக இணைக்கப்படுகின்றன.
.இந்த ரயில்களில் நவராத்திரி பண்டிகை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க 3 ஏசி வகுப்பு, 8 படுக்கை வசதி கொண்ட பெட்டி, 4 பொதுப்பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன.
ஜனவரி 6 வரை கூடுதல் பெட்டிகள்
அக்டோபர் 1ம் தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதால், பயணிகள் எந்த நெரிசலும் இன்றி ராமேஸ்வரம் புனித மற்றும் சுற்றுலா பயணம் சென்று வரலாம்.
========================