Puducherry Assembly Elections 2026 : DMK announces candidates for 13 constituencies google
இந்தியா

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : திமுக சார்பாக போட்டியிடும் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

Puducherry Assembly Elections 2026 : புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

Rohini

புதுச்சேரி தேர்தல்

Puducherry Assembly Elections 2026 : வருகிற 2026 ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் புதுச்சேரிக்கு வருகிற 9 ம் தேதி சட்டமன்ற தேர்தலானது நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்து,

இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு நாளை இறுதி ஆகிறது

திமுக வேட்பாளர்கள்

புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகளின் வேட்பாளர்களின் பட்டியலானது அறிவிக்கப்பட்டுள்ளது . தற்போதுள்ள 6 எம்எல்ஏ-க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணியில் ஒரு தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி தொகுதிகள்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் - திமுக இருகட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் .

இதனிடையே நீண்ட குழப்பங்களுக்கு பிறகு இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு வேட்புமனு தாக்கல் இறுதி நாளான நேற்று முடிவடைந்தது. இதில் காங்கிரஸூக்கு 16 இடங்களும், திமுகவுக்கு 14 இடங்களும் ,விடுதலை சிறுத்தை கட்சிக்கு 1 தொகுதியிலும் போட்டியிடும் என திமுக சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள்

அதன்படி புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் விவரங்களை திமுக அறிவித்துள்ளது .

வேட்பாளர்களின் விவர பட்டியல்

திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது .அதன்படி ,வில்லியனூர் - திமுக மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, மங்கலம்-எஸ்.எஸ். ரங்கன், திருபுவனை-அங்காளன்(சுயேட்சை எம்எல்ஏ), பாகூர் - எம்எல்ஏ செந்தில்குமார், முதலியார்பேட்டை - எம்எல்ஏ சம்பத்,

மேலும் படிக்க : Puducherry : இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடு : காங்கிரஸ் 16, திமுக 14 : விசிக தனித்துப் போட்டி!

உப்பளம்-எம்எல்ஏ அனிபால்கென்னடி,

உருளையன்பேட்டை - கோபால்,

நெல்லித்தோப்பு - கார்த்திகேயன்,

ராஜ்பவன்-விக்னேஷ் கண்ணன் முன்னாள் அமைச்சர் ப. கண்ணன் மகன்,

காலாப்பட்டு - செந்தில்(எ)ரமேஷ்,

கதிர்காமம் - வடிவேலு,

காரைக்கால் தெற்கு - எம்எல்ஏ நாஜிம்,

நிரவி டி.ஆர்.பட்டினம் - எம்எல்ஏ நாக தியாகராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

==========