Puducherry Assembly elections, NR Congress-BJP alliance led by Chief Minister N. Rangasamy won a landslide victory  google
இந்தியா

புதுச்சேரியில் மீண்டும் N.R. காங்கிரஸ் ஆட்சி : சாதித்த ரங்கசாமி! சறுக்கிய இந்தியா கூட்டணி : கணக்கை தொடங்கிய தவெக!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைத்தது.

Kannan

புதுச்சேரி சட்டமன்ற தொகுதி

30 தொகுதிகளை கொண்டு புதுச்சேரி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான என்டிஏ கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, தவெக என மும்முனைப் போட்டி நிலவியது.

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

ரங்கசாமி கூட்டணிக்கு 18 இடங்கள்

ஆட்சி அமைக்கத் தேவையான 16 இடங்களை விடக் கூடுதலாக 18 இடங்களைக் கைப்பற்றி ரங்கசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

இதில் என்.ஆர்.காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் எல்ஜேகே தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

செல்வாக்கு குறையாத ரங்கசாமி

ரங்கசாமியின் இந்தத் தொடர் வெற்றி, புதுச்சேரி அரசியலில் அவரது பிடி குறையவில்லை என்பதையே மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அந்த வகையில் மீண்டும் முதல்வராகிறார் ரங்கசாமி.

இந்தியா கூட்டணி படுதோல்வி

திமுக, காங்கிரஸ் உள்ளடக்கிய 'இந்தியா' கூட்டணிக்கு இத்தேர்தல் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

திமுக 5 இடங்களில் வெற்றி பெற்றாலும், தேசியக் கட்சியான காங்கிரஸ் வெறும் ஒரு இடத்தை மட்டுமே பிடித்து பெரும் சறுக்கலைச் சந்தித்துள்ளது. இக்கூட்டணியால் ஒட்டுமொத்தமாக 6 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

புதுச்சேரியிலும் தவெக

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

தவெக தனித்து 2 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான நேயம் மக்கள் கழகம் ஒரு இடத்திலும் என மொத்தம் 3 தொகுதிகளில் வெற்றி வெற்றி பெற்றன.

மூன்று சுயேச்சைகள் வெற்றி

இவை தவிர 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

=============