Puducherry Government Announces ₹1,000 for Government School Students to Purchase Schoolbags and Shoes!
புதுச்சேரி அரசின் அதிரடி அறிவிப்பு
புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, மாணவர்கள் அவர்களின் விருப்பப்படி புத்தகப்பை மற்றும் ஷூ வாங்க ரூ. 1000 நிதியுதவி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை, ஷூ
இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறும்போது, எப்போதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பையும், அவர்களுக்கான சரியான அளவில் ஷூவும் வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆனால் இப்போது சட்டமன்ற தேர்தல் காலம் நெருங்கிவிட்டது. இந்நேரத்தில் எப்போதும் போல புத்தகப் பை மற்றும் ஷு கொடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000
இதனால் மாணவர்களுக்கு ரூ.1000 கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலமாக மாணவர்கள் தாங்கள் விரும்பியபடி வாங்கிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களின் நலனுக்காக வழங்கப்படும் இந்த தொகையானது நேரடியாக பெற்றோரின் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும்
தாயின் கணக்கில் ரூ. 1000 வரவு
அதிலும் குறிப்பாக மாணவர்களின் தாயின் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரி அரசு வழங்கும் இந்த தொகையின் மூலம் மாணவர்கள் தாங்கள் விரும்பியபடி புத்தகப் பை மற்றும் ஷு வாங்கிக்கொள்ள முடியும்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.1000 நிதியுதவு மூலமாக கிட்டத்தட்ட எண்பதாயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
====