Puducherry, women below poverty line assistance increased to Rs. 2,500, promise fulfilled  google
இந்தியா

புதுவை ,”வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மகளிருக்கு உதவித்தொகை ரூ. 2,500 ஆக உயர்வு” வாக்குறுதி நிறைவேற்றம் !

புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Rohini

இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த என்.ஆர். காங்கிரஸ்

நடந்து முடிந்த புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது.

முதல்வராக பொறுப்பேற்ற ரங்கசாமி

இந்த நிலையில் மீண்டும் முதல்வராக என். ரங்கசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்

தேர்தல் வாக்குறுதி

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக என்.ஆர். காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியாக புதுவையில் 21 முதல் 55 வயது வரையிலான, அரசின் இதர மாதாந்திர நிதியுதவிகள் எதையும் பெறாத வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித் தொகை ரூ. 1,000 -ல் இருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவித்திருந்தது

வாக்குறுதி நிறைவேற்றம்

என்.ஆர். காங்கிரஸ் தான் கூறியிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார் இதன் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து மகளிருக்கும் உதவிதொகையானது உயர்த்தப்பட்டுள்ளது

இத்திட்டதிற்கு ரூ.16.11 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது புதுவை அரசு

மேலும், 64,450 குடும்பத் தலைவிகள் பயன்பெறும் இத்திட்டத்திற்கு ரூ.16.11 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான ரங்கசாமி அரசு தெரிவித்துள்ளது