திரிணாமுல் காங்கிரசை வீழ்த்திய பாஜக
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், அக்கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது. தீதி மம்தாவின் எஃகு கோட்டை சுக்கு நூறாக்கப்பட்டது.
திரிணாமூல் காங்கிரசார் கலகம்
ஒரு பக்கம் தேர்தல் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் மம்தா பானர்ஜி தவிக்க, இன்னொரு புறம், கட்சியினர் கலகம் செய்து வேதனையை அதிகப்படுத்தி வருகிறார்கள்.
மம்தாவுக்கு பின்னடைவு
தேர்தல் முடிவுக்கு பிறகு மம்தா கூட்டிய எம்எல்ஏக்கள் கூட்டத்தை 58 பேர் புறக்கணித்தனர். 22 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தனி அணியாக நிற்கும் எம்எல்ஏக்களில் ஒருவரான ரிதப்ரதா பானர்ஜி, எதிர்க்கட்சி தலைவராகி இருக்கிறார்.
இரண்டாக உடைந்த திரிணாமூல்
திரிணாமுல் காங்கிரசை மம்தா தொடங்கிய 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் ரிதப்ரதா வசம் 60 எம்எல்ஏக்கள், மம்தா பானர்ஜி பக்கம் 20 பேர் என அக்கட்சி இரண்டாக உடைந்து நிற்கிறது.
எம்பி, எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
அடுத்த அதிர்ச்சியாக மம்தா கூட்டிய கூட்டத்தில், வெறும் 8 எம்எல்ஏக்கள், 6 எம்பிக்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். நாடாளுமன்ற இரு அவைகளிலும் திரிணாமூல் காங்கிரசுக்கு 41 எம்பிக்கள் இருக்கிறார்கள்.
வெறும் 6 பேர் மட்டுமே கலந்து கொண்டது, சிவசேனா பாணியில் திரிணாமூல் செல்வதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மம்தாவே தங்கள் தலைவர் என்று கூறும் அதிருப்தியாளர்கள், அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி, கட்சி விவகாரங்களில் தலையிட கூடாது என போர்க்கொடி தூக்கி நிற்கின்றனர்.
கட்சியை மீட்டெடுப்பாரா மம்தா?
30 ஆண்டுகால கட்சியை மம்தா பானர்ஜி மீட்டு எடுப்பாரா? அல்லது பெரும் பின்னடைவை சந்திப்பாரா என்பது போகப்போக தெரிய வரும்.
==============