Rail One App Launched By Indian Railways https://x.com/Central_Railway
இந்தியா

'ரயில் ஒன்' செயலி அறிமுகம் : அனைத்து சேவைகளும் கிடைக்கும்

Rail One App Launched By Indian Railways : ரயில்வேயின் அனைத்து சேவைகளை பெறும் வகையில், ஒரே செயலியாக 'ரயில் ஒன்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Kannan

Rail One App Launched By Indian Railways: உலக அளவில் அதிக ஊழியர்களை கொண்டுள்ள இந்திய ரயில்வேத்துறை, நாள்தோறும் கோடிக் கணக்கான மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.

ரயில்வேயில் நவீன மயமாக்கல் :

நவீனமயமாக்கலுக்கு ஏற்ப ரயில்வேயில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிக்க, நடைமேடை சீட்டு பெற என, ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலிகளை பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது.

இதனால், பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, அனைத்தை சேவைகளையும் ஒருங்கிணைத்து, ஒரே செயலியில் எல்லா சேவைகளையும் அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

'ரயில் ஒன்' செயலி’ அறிமுகம் :

இதற்காக 'ரயில் ஒன்' செயலி’ (Rail One App) வடிவமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த விழாவில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'ரயில் ஒன்' செயலியை வெளியிட்டார்.

இந்தச் செயலி மூலம், ரயில்வே துறையின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பயணிகள் பெற முடியும்.

அனைத்தும் சேவைகளும் ஒரே செயலியில் :

இனி 8 மணி நேரத்துக்கு முன்னரே 'ரிசர்வேஷன் சார்ட்' தயாராகி விடும். பயணிகள் தங்கள் பயண டிக்கெட் முன்பதிவு செய்வதுடன், அதன் நிலைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.

இதேபோல் முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளையும் பயணியர் பெறலாம். தொலைதுார பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு தேவையான உணவுகளை 'ஆர்டர்' செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகத்தின் உதவி எண்களையும் எளிதாக தொடர்பு கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.பார்சல்களை வெளியூர்களுக்கு அனுப்புவது குறித்த தகவல்களை கேட்டறிய வசதியும் இச்செயலியில் இடம்பெற்றுள்ளது.

ரயில் பயணிகளுக்கு பெரும் பயன் :

ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ்., இயங்குதளங்களை பயன்படுத்தி, இச்செயலியை டவுன்லோடு செய்யலாம். ஏற்கனவே ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் யு.டி.எஸ்., செயலிகளை பயன்படுத்துவோர், அதே விபரங்களை பதிவிட்டு, ரயில் ஒன் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்ற செயலிகளில் இருப்பதுபோல், ரயில்வே வாலட் வசதியும் உள்ளது. இதன் வாயிலாக, பல்வேறு செயலிகளுக்கு மாற்றாக, ஒரே செயலியை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ரயில் பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

====