Railways launch online date-change facility for tickets from January 
இந்தியா

ஆன்லைன் ரயில் முன்பதிவு டிக்கெட்: ஜன.முதல் வேறு தேதிக்கு மாற்றலாம்

IRCTC Train Ticket Reservation Date Change : 'ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்து உறுதியான ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யாமல் வேறு தேதிகளுக்கு மாற்றிக்கொள்ளும் வசதி ஜனவரியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

Kannan

ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் :

IRCTC Train Ticket Reservation Date Change : 'ஆன்லைன்' மூலம் செய்யப்படும் ரயில் டிக்கெட் முன்பதிவின் பயணத் தேவையை மாற்ற வேண்டும் என்றால், அந்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். புதிதாக மீண்டும் முன்பதிவு செய்ய வேண்டும். அந்த நடைமுறைதான் தற்போது அமலில் உள்ளது.

டிக்கெட்டை ரத்து - சேவைக் கட்டணம்

இதன் காரணமாக தேதியை மாற்றி வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது, பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

முன்பதிவு டிக்கெட்டை ரத்து(Train Ticket Cancellation) செய்யும் போது அதற்கான கட்டணம் பிடிக்கப்படுவதால், பயணியருக்கு கூடுதல் செலவும் ஏற்படுகிறது.

முன்பதிவு டிக்கெட் - வேறு தேதிக்கு மாற்றலாம்

இந்த முறையில் மாற்றம் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வந்த நிலையில், அதற்கான புதிய திட்டத்தை வரும் ஜனவரி மாதம் அறிமுகம்(IRCTC Train Ticket Booking Change Date) செய்கிறது. அதன்படி, உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணியர், பயண தேதியில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது. இந்த தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்திருக்கிறார்.

மேலும் படிக்க : சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் 20 பெட்டிகள்: மக்கள் வரவேற்பு

ரயில் பயணிகளுக்கு நல்வாய்ப்பு :

அதேசமயம், வேறு தேதியில் டிக்கெட் இருந்தால் மட்டுமே இந்த மாற்றத்தை செய்ய முடியும். மாற்றப்படும் தேதிக்கான ரயில் கட்டணம் கூடுதலாக இருந்தால், அந்த தொகையை மட்டும் செலுத்தினால் போதும். வேறு கூடுதலாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது(IRCTC Train Ticket Date Change Charges) என்று ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

=============